ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சியர்ரா லியோனில் 21 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பு
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் 21 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களை புரட்சிகர ஐக்கியமுன்னணி தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.
கிழக்கு சியர்ரா லியோனில் இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.தீவிரவாதிகள் எதற்காக இந்திய வீரர்களை கடத்திச் சென்றுள்ளனர் என்பது புரியல்லைஎன்று நியூயார்க்கில் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பிரெட் எக்கார்ட் தெரிவித்தார்.
1999-ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கும், சியர்ரா லியோன் அரசுக்கும் இடையே ஏற்பட்டஅமைதி ஒப்பந்தம் மே மாதம் முறிந்தது. ஒப்பந்தத்தை மீறும் வகையில், மே மாதத்துவக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் இறங்கினர். அங்கு ஏற்கனவேபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அமைதி காப்புப் படையினரை அவர்கள்சிறை பிடித்தனர். லைபீரிய அதிபரின் முயற்சிக்குப் பின் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள்விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், 21 இந்திய வீரர்களை தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டுள்ளனர்.இவர்களை மீட்பது குறித்து லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லருடன், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 500 அமைதி காக்கும் படையினரை மீட்டதில்டெய்லர் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
அன்னான், டெய்லருடன் பேசியது குறித்து பிரெட் எக்கார்ட் கூறுகையில்,தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள அமைதி காக்கும் படையினர்உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அமைதி காக்கும் படையினர் சுமூகமாகதங்களது நடவடிக்கையில் ஈடுபட வழி செய்ய வேண்டும் என்று அன்னான் கேட்டுக்கொண்டார்.
ப்ரீடவுனிலுள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹாஸ்ட் கூறுகையில்,குய்வா என்ற நகரில் அமைதி காக்கும் பணியில் 21 இந்திய வீரர்கள்ஈடுபட்டிருந்தபோது அவர்களை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். குய்வா நகரிலிருந்துஅவர்களை லைபீரியாவுக்கு தீவிரவாதிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
லைபீரியாவில் அவர்களை தீவிரவாதிகள் விடுவிக்கலாம் என்று நம்புகிறோம்.பென்டெம்பு நகர் வழியாக அவர்களை தீவிரவாதிகள் அழைத்துச் சென்றுகொண்டுள்ளனர். இதற்கு முன்பு விடுவிக்கப்பட்ட அமைதி காக்கும் படையினரையும்கூட இந்தப் பாதை வழியாகத்தான் தீவிரவாதிகள் அழைத்துச் சென்றனர் என்றார்விம்ஹாஸ்ட்.
இந்த நிலையில் வன்முறை காரணமாக மகேனி நகரிலிருந்து தப்பி ஓடிய பொதுமக்கள்தற்போது மீண்டும் அந்த நகருக்குத் திரும்பி வரத் துவங்கியுள்ளனர். மே மாதத்துவக்கத்தில் தீவிரவாதிகள் வன்முறையில் இறங்கியதால் இவர்கள், மகேனியின்புறநகர்ப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications