கி-ரிக்-கெட் மேட்ச் பிக்ஸிங் வழக்கு: குற்-றம் சாட்-டப்-பட்-ட-வர்-க-ளுக்-கு ஜாமீன்
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிஷன் குமார் மற்றும் ராஜேஷ் கல்ரா ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவருக்கும் எதிராக போலீஸ் மற்றும் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால் இவர்களை ஜாமீனில் விடுவிப்பதாகஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. குற்றவியல் சட்டப்படி, கைது செய்யப்பட்ட நபர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அப்படித்தவறினால் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக வெளியான புகாரையடுத்து லண்டன் புக்கியானசஞ்சீவ் சாவ்லா பெயர் அடிபட்டது. அவரது கூட்டாளியான ராஜேஷ் கல்ரா டெல்லியில் ஏப்ரல் 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். மே 28-ம் தேதிகிஷன் குமார் கைது செய்யப்பட்டார்.
ஹவாலா மோசடி மூலம் சில வர்த்தகங்களை மேற்கொண்டதாகக் கூறி பொருளாதாரக் குற்றத்தடுப்பு அதிகாரிகள், பெரா சட்டத்தின் கீழ் கிஷன்குமாரைக் கைது செய்தனர். போலீஸ் குற்றப் பிரிவு சார்பிலும் கிஷன் குமார் மீது மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால், போலீஸ் மற்றும் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கிஷன் குமார் மீதுகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கிஷன் குமார் மனு செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி, போலீஸ் தொடர்ந்த வழக்கில் ரூ.2 லட்சம் தனி நபர் ஜாமீனிலும், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு வழக்கில் ரூ. 5 லட்சம் தனி நபர் ஜாமீனிலும் குமாரை விடுதலை செய்துஉத்தரவிட்டார்.
டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சாட்சியங்களை அளிக்க முயலக் கூடாது ன்ற நிபந்தனைகளையும் நீதிபதிசோதி கிஷன் குமாருக்கு விதித்துள்ளார்.
கல்ராவுக்கு ரூ. 2 லட்சம் தனி நபர் ஜாமீனிலும், டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்ஜாமீன் கொடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications