தமிழகத்தில் இன்று
தேவாலயத்தில் குண்டுவெடிப்பு- கோவாவில் பலத்த பாதுகாப்பு
பனாஜி:
கோவாவிலுள்ள வாஸ்கோடாகாமாவில் செயின்ட் ஆன்ட்ரூ தேவாலயத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து கோவாமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு செயின்ட் ஆன்ட்ரூ சர்ச்சில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் யாரும்காயமடையவில்லை. குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் யார் என்று தெரியவில்லை. யாரும் இதுதொடர்பாகக் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கப் புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மத போதகர்கள், கோவாவின் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
கார்மோ மார்ட்டின் என்ற பாதிரியார் கூறுகையில், கடவுளை வழிபடும் புனிதத் தலங்களில் நடந்துள்ள இதுபோன்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள்நடக்கக்கூடாது. அப்படி நடந்தது துர்திர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ, ஆந்திரப்பிரதேசம், கர்நாடாகா, கோவாவில் சர்ச்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications