தமிழகத்தில் இன்று
சாலமன் தீவுப் பிரச்சனை: தீர்-வு காண காமன்வெல்த் முயற்சி
பிரிஸ்பேன்:
சாலமன்தீவுப் பிரச்சனைக்குத் தீர்வு காண காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் முயன்று வருகின்றனர்.
முன்னதாக இந்தத் தீவில் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தற்காலிகத் தீர்வு காண்பதற்கு அங்கே பிரதமரைக் காவலில்வைத்திருக்கும் மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் முதல்கட்டமாக காமன்வெல்த் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்த வார இறுதியில் அவர்களுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
தெற்குப்பசிபிக் பிராந்தியா நாடான சாலமன் தீவுகளில் தலைநகர் ஹோனியராவுக்குள் திங்கள்கிழமை புகுந்த தீவிரவாதிகள்ரத்தமில்லாத புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் உள்ளிட்ட பலரை வீட்டுக் காவலில் வைத்தனர்.
சாலமன் தீவுகளில் உள்ள இரு தீவு மக்களுக்கிடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் இருந்து வருகிறது.குடல்கனால் தீவுக்கும், மலத்தியன் தீவு மக்களுக்கும் இதுதொடர்பாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 60 பேர் இறந்துள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள புரட்சிக்கு, மலத்தியன் தீவைச் சேர்ந்த மலத்தியன் ஈகிள்ஸ் என்ற தீவிரவாதிகள்தான் காரணம்.
மலத்தியன் தீவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆண்ட்ரூ நோரிதான் புரட்சிக்குத் தலைமை வகித்துள்ளார். அவருக்கு மலத்தியன் ஈகிள்ஸ்தீவிரவாதிகளின் படை ஆதரவு கொடுத்துள்ளது. சாலமன் தீவு போலீஸாரில் சிலரும் இவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது.
குடல்கனால் தீவைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தனிப் படை உண்டு. இவர்களுக்கு இஸதாபு சுதந்திரப் போராட்ட அமைப்பு என்றுபெயர். இவர்கள், மலத்தியன் தீவு மக்கள், தங்கள் தீவுக்கு வந்து குடியேறுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதைஎதிர்த்துத்தான் கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
பிஜியில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் பிஜியில் உள்ள இந்த இரண்டு தீவிரவாத அமைப்புக்களுக்கும் அமைதியான முறையில் தீர்வுகாண அரசு முயற்சி செய்கிறது. காமன்வெல்த் அமைப்பின் செயற்குழு வில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாட்டு வெளியுறவுஅமைச்சர்கள் சனிக்கிழமை தலைநகர் ஹோனியேராவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சாலமன் தீவு பிரதமர் பார்த்தலோமியு உலுபா ஆலு தொடர்ந்து துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளால் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
அங்குள்ள ரேடியோ செய்தி ஒன்றில் தலைநகர் ஹோனியோராவில் மிகவும் அமைதியான சூழ்நிலை காண்படுகிறது. வங்கிகள் திறந்துள்ளன.விமானநிலையம் தற்காலிமாக திறக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இஸ்தாபு அமைப்பினருக்கும், மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் புதன்கிழமை 50 முதல் 100 பேர்கொல்லப்பட்டிருக்கலாம் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளன. ஆனால் இஸ்தாபு சுதந்திரப் போராட்ட அமைப்பினர்இந்தச் செய்தியை மறுத்துள்ளனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications