For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கிரிக்கெட் வாரியம் அரசியல் சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் போன்ற ஊழல்களை கட்டுப்படுத்தவேண்டுமானால், இந்தியக் கிரிக்கெட் வாரியம், இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டுசெயல்பட வேண்டும் என்று பெங்களூரைச் சேர்ந்த பிரபல சட்ட நிபுணர் கருத்துத்தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆல்ரவுண்டர் மனோஜ் பிரபாகர் சமீபத்தில் கிளப்பிய மேட்ச் பிக்ஸிங்புயலால், கிரிக்கெட் உலகம் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. தனது புகாருக்கு ஆதாரமாகவீடியோ கேசட்டுகளையும் சி.பி.ஐவசம் கொடுத்துள்ளார் பிரபாகர். இது செல்லுமா,செல்லாதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இத்தகைய புகார்கள் எந்தளவுகையாளப்படுகின்றன, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா என்ற கேள்வியும்மறுபக்கம் புதைந்து கிடக்கிறது.கிரிக்கெட் உலகை ஆட்சி செய்து வரும் இந்த ஊழல் பிரச்சினையை எப்படிக் களைவதுஎன்பது குறித்து பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழக பேராசிரியர்வழக்கறிஞர் ஆர்.முரளிதரன் சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

மேட்ச் பிக்ஸிங் குற்றத்துக்குரியதா?

எந்த கிரிக்கெட் வீரர் தவறு செய்தார், யார் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதைப்பார்ப்பதற்கு முன்பு, மேட்ச் பிக்ஸிங் என்பது திருட்டு, கடத்தல், வழிப்பறி, மோசடிபோல ஒரு குற்றச் செயல் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, கிரிக்கெட் வீரர்கள் செய்ததாக சொல்லப்படும் மேட்ச் பிக்ஸிங், பெட்டிங்போன்றவற்றை குற்றமாக எடுத்துக் கொண்டு அவர்களைத் தண்டிக்க இந்திய ஊழல்தடுப்புச் சட்டத்தில் இடமுண்டா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இருப்பினும், கிரிக்கெட் வாரியத்தின் கீழ் வரும் வீரர்கள், வாரியத்துடனானஒப்பந்தத்தை மீறும் வகையில், புக்கி அல்லது பிற தரகர்களுடன் ஆட்டத்தின் போக்கைநிர்ணயிப்பதற்காக ஒப்பந்தம் அல்லது பேரத்தில் ஈடுபட்டால் அது விதி மீறலாகும்.இருப்பினும் கூட, இந்திய அரசியல் சட்டத்தின்படி இது தண்டிக்கப்படக் கூடிய குற்றம்அல்ல.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் தன்மை:

அடுத்ததாக, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் தன்மை. சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் விதி, கிரிக்கெட் வாரியம் என்பது தனி அமைப்பாக, சுயாட்சி கொண்டதாக,அரசு சாரா அமைப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

ரவி சாஸ்திரி, பத்திரிகைகளில் எழுத முடிவு செய்தபோது, அதை இந்திய கிரிக்கெட்வாரியம் ஆட்சேபித்தது. இதை அவர் எதிர்த்து பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்.அவர் மீது வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்குப் போனார் சாஸ்திரி. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரம் என்னஎன்பதை நிரூபிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார் அப்போதைய தலைமை நீதிபதிவெங்கடாச்சலய்யா. சாஸ்திரியும், வாரியமும் சமரசம் செய்து கொண்டன.

சித்து லண்டனிலிருந்து கோபத்துடன் திரும்பி வந்தபோது, பெரிய பூகம்பம் கிளம்பும்என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

ஷான்வார்னேவும், மார்க் வாக்கும் பணம் வாங்கியதாக ஒத்துக் கொண்டபோது,பரவாயில்லை என்று சாதாரண அபராதத்துடன் அவர்களை உலவ விட்டதுஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

ஆஸ்திரேலிய வீரர்கள் மீது பாகிஸ்தான் வீரர்கள் வழக்குத் தொடர்ந்தபோதுஅவர்களை விசாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு பாகிஸ்தான் நீதிபதிக்குஉத்தரவிட்டது ஆஸ்திரேலியா. அவரும் போனார்.

இப்போதைய கேள்வியெல்லாம், கிரிக்கெட் வாரியங்களின் தன்மை என்ன? அவற்றின்சட்ட அந்தஸ்து என்ன என்பதுதான். வாரியங்கள் எல்லாம் குட்டி அரசாங்கங்களா?அல்லது பொதுமக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் பங்கேற்கும் அறக்கட்டளைபோன்றவையா?. அல்லது சங்கம் போன்றதா?.

பிரபாகரின் ஆதாரம் எடுபடுமா?

பிரபாகரின் விஷயத்தில் அவரது ஆதாரத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றகேள்வி எழுந்துள்ளது. இந்திய சாட்சியச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கொடுக்கும் அறிக்கை அல்லது வாக்குமூலம், குற்றத்தை பார்த்தவர் அளிக்கும்வாக்குமூலம் ஆகியவையே ஆதாரமாக கருதப்படும்.

இப்போது, பிரபாகர் கொடுத்த வீடியோ கேசட்டுகளில் உள்ள நபர்கள் யாருக்கும்,தாங்கள் பேசியது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியாது. எனவே இது தனி நபர்உரிமையை மீறிய செயல். இருப்பினும் இதன் மூலம் மட்டும், சேகரிக்கப்பட்ட ஒருஆதாரத்தை சட்டவிரோதம் என்று கூற உதவாது.

என்ன செய்யலாம்?

மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் போன்றவற்றை ஒழிக்க வேண்டுமானால், நாம் செய்யவேண்டியவை என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

30 வருடங்களுக்கு முன்பு இருந்த கிரிக்கெட் ரசிகருக்கும், இப்போதைய ரசிகருக்கும்இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. கிரிக்கெட்டைப் பார்ப்பது மிகவும் எளிதாகிவிட்டது. கிரிக்கெட் பற்றிய அறிவும் சுலபமாகி விட்டது. சிரமப்பட்டு கிரிக்கெட்டைஸ்டேடியத்தில் பார்க்க வேண்டியதில்லை.

டி.வியில் பட்டனைத் தட்டினால் நமது விருப்பத்திற்கேற்பட போட்டிகளை பார்க்கமுடிகிறது. கிரிக்கெட் பற்றிய புள்ளிவிவரங்கள் இன்டர்நெட்டில் கொட்டிக் கிடக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கிரிக்கெட்டில் நிலவும் குறைபாடுகளைக் களையவேண்டுமானால்;

1. பொது நலன் வழக்குப் போடலாம்: இந்திய கிரிக்கெட் வாரியம், அரசியல் சட்டத்தின் கீழ்தான் இயங்க வேண்டும் என்று கோரி பொது நலன் வழக்குப் போடலாம். கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும், ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

2. சிவில் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரலாம்: பொது அறக்கட்டளை போன்று கிரிக்கெட் வாரியம் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் அறக்கட்டளை சரியாக இயங்காவிட்டால், அட்வகேட் ஜெனரலுக்கு எழுதி, அதன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரலாம்.

3. அரசியல் சார்பற்ற அமைப்பிடம் ஒப்படைக்கலாம்: அரசியல் கலப்பற்ற, சிவில் தன்மை கொண்ட அமைப்பிடம் வாரியத்தை ஒப்படைக்கலாம்.

இதெல்லாம் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் சட்டப்பூர்வமாக நடக்க வேண்டியகாரியங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில்இந்தப் பிரச்சினை வலுவாக எழுப்பப்பட வேண்டும். அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X