15,000 டாலர் லஞ்-சம் கொ-டுத்-த குரோனியே

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்:

சர்வதேச ஒரு நாள் போட்டியில் மோசமாக விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே, 15,000 டாலர் லஞ்சம்கொடுக்க முயன்றதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹென்றிவில்லியம்ஸ் கூறியுள்ளார்.

குரோனியே மீதான கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசுவிசாரணை நடத்தி வருகிறது. இதற்காக நீதிபதி கிங் தலைமையில் கமிஷன்அமைக்கப்பட்டுளளது.

இந்த விசாரணையின் போது ஹெனறி வில்லியம்ஸ் அளித்த வாக்குமூலத்தில் இந்தத்தகவலை தெரிவித்துள்ளார். வில்லியம்ஸின் வாக்குமூலம்:

இந்த ஆண்டுத் துவக்கத்தில் இந்தியாவுடனான ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்களில்50 ரன்களுக்கும் மேலாக ரன்கள் விட்டுத் தருவதற்காக குரோனியே 15,000 டாலர்கொடுத்தார். இருப்பினும், தோள்பட்டை காயம் காரணமாக அன்று 2 ஓவர்களுக்கும்குறைவாகவே பந்து வீசினேன்.

பணம் வாங்கிக் கொண்டு குரோனியேவினால் விளையாட முடியுமானால், என்னாலும்கூட விளையாட முடியும் என்றார் வில்லியம்ஸ்.

"லஞ்சம் கொடுக்க முயன்றார் குரோனியே

முன்னதாக ஆல்ரவுண்டர் பீட்டர் ஸ்டிரைடம் அளித்த வாக்குமூலத்தில்,

இந்தியாவுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடந்த ஒரு போட்டியில் 250 ரன்களுக்குஉள்ளாக தென் ஆப்பிரிக்க அணி எடுத்தால் 20,000 டாலர் கிடைக்கும் என்றுகுரோனியே கூறினார்.

பிப்ரவரி24 முதல் 26 வரை மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போதுஇந்தப் பேரம் பேசப்பட்டது. 250 ரன்களுக்குள் நாம் அவுட் ஆகி விட்டால் எனக்குமட்டும் 9900 டாலர் கொடுப்பதாக குரோனியே தெரிவித்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 50 அல்லது 60 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்தால், ஒருவேளைபணம் வாங்குவது குறித்து நான் யோசித்திருப்பேன்.

அதற்குப் பிறகு அவர் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. அடுத்த நாள், 19,800டாலர் கொடுத்திருந்தால் ஒத்துக் கொள்வீர்களா என்று குறும்பாக கேட்டார். நானும்சேர்ந்து சிரித்தேன் என்றார் ஸ்டிரைடம்.

கிப்ஸ் நீக்கம்:

இதற்கிடையே, குரோனியேவிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு விளையாடியதைஒத்துக் கொண்ட, துவக்க ஆட்டக்காரர் ஹெர்சல்லி கிப்ஸ் அணியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து கிப்ஸ்நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை கமிஷனிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில்15,000 டாலர் லஞ்சம் வாங்க ஒத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இதையடுத்துஅவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தென் ஆப்பிரிக்க அணி தலைவர் அலி பேச்சர் இதைத் தெரிவித்துள்ளார். கிப்ஸ்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும்அவர் கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+