தமிழகத்தில் இன்று
க-லை பாடத்-தில் 2ம் இடம் பிடித்-த ம-து-ரை மாணவருக்கு 50 ஆயிரம் நிதி
சென்னை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவன் செல்லப்பாண்டி இந்திய -க-லை-கலாச்சார பாடத்தில் 161மதிப்பெண்பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மாணவர் செல்லப்பாண்டியின் தந்தை உசிலம்பட்டியில் முடிதிருத்தும் தொழில்செய்து வருகிறார்.
மாணவர் செல்லப்பாண்டி முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் தனது மேற்படிப்பைத் தொடர தனக்கு எந்தவித வசதியும் இல்லையென்றும்தான் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்து தனக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடமும் நிதியுதவியும், வேண்டுமென்றும்கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முதல்வர் கலைஞர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சியில் இடம்பெற்றுத்தருமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் கலைஞர் அவர்கள் இம்மாணவரின் மேற்படிப்புச் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடஉத்தரவிட்டுள்ளார். இத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புநிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வட்டித் தொகையான 500 ரூபாய் மாதம் தோறும் அக்கழகத்தின் மூலம் நேரடியாக மாணவர்செல்லப்பாண்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications