தமிழகத்தில் இன்று
6 வய-தில் ஒ-ரு மாயா...மச்-சீந்-த்ரா
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மாஜிக் கலையில் கை தேர்ந்தவனாகத் திகழ்கிறான்.
மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பார்கள். அதை மெய்ப்பித்து வருகிறான் பாக்யநாத். 6 வயதாகும் பாக்யநாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன்.தொழில்ரீதியாக மாஜிக்கைக் கற்று வைத்துக் கொண்டு வித்தை காட்டி வருகிறான். பாக்யநாத்தின் கைவித்தையைப் பார்த்து பெரிய மாஜிக் மலைகளேபிரமித்துப் போய் நிற்கின்றனர்.
இந்தியாவிலேயே இளம் வயது "மந்திரவாதி என்ற பெயரை பாக்யநாத் பெற்றுள்ளார். தனக்கென தனிப் பட்டாளத்தையே பாக்யநாத் வைத்துள்ளார்.இவரது குழு வைத்துள்ள மாஜிக் பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும்.
காற்றில் பெண்ணை மிதக்க விடும்போதும், கர்ச்சீப்பை உதறி அதிலிருந்து வாத்துக்களை வெளியே எடுக்கும்போதும், பெண்ணின் வயிற்றில் கத்தியைபாய்ச்சும்போதும் பாக்யநாத்தின் மாஜிக் வித்தை பிரமிக்க வைக்கிறது. பார்வையாளர்கள் ஆச்சரியம் அகலாத விழிகளுடன் கைதட்டி பாக்யநாத்தைபாராட்டுகின்றனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாஜிக் நிகழ்ச்சிகளை பாக்யநாத் நடத்தியுள்ளார். ஒரு காட்சி மூலம் ரூ. 15,000 சம்பாதிக்கிறார். இளம் வயதில்மாயாஜாலம் காட்டும் பாக்யநாத்தின் திறமை குறித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தக நிர்வாகிகளுக்கு பாக்யநாத்தின் பெற்றோரும், நலம்விரும்பிகளும் எழுதியுள்ளனர். தற்போது 15 வயது மாஜிக் சிறுவனின் சாதனைதான் உலக சாதனையாக உள்ளது.
பாக்யநாத்தின் தந்தை பேராசிரியர் நாத் கூறுகையில், பாக்யநாத்திற்கு மூன்று வயது இருக்கும்போதே, மேடை ஏறி விட்டான். அவனது பள்ளியில் நடந்தநிகழ்ச்சியில் தனியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினான். அப்போது துவங்கியதுதான் அவனது மந்திர வாழ்க்கை.
அவனது வளர்ச்சி நான் நிகழ்ச்சி நடத்தும் மேடைகளில்தான் இருந்தது. எனது நிகழ்ச்சியின்போது, பாக்யநாத் பெரும்பாலும் மேடைகளில்தான் இருந்ததுஎன்றார். நாத், கடந்த 20 வருடமாக "வித்தை காட்டி வருகிறார்.
பாக்யநாத்தின் தாயார் ரேகி கூறுகையில், குழந்தைப் பருவத்திலிருந்தே பாக்யநாத் மாஜிக்கில் ஆர்வமாக உள்ளான். தனது தந்தை அணியும் கருப்பு கவுன்மீது அவனுக்கு அலாதி பிரியம். மாஜிக் நிகழ்ச்சிகள் ஏதாவது டி.வியில் வந்தால் கண் கொட்டாமல் பார்ப்பான் என்றார்.
எனது தந்தையைப் போல நானும் மிகப் பெரிய மாஜிக் நிபுணராக வர வேண்டும். வருவேன். மேடையில் நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு பயமேஇல்லைஎன்கிறான் பாக்யநாத்.
பாக்யநாத்தின் மாஜிக் ஐட்டங்களில் அவனுக்கு மிகவும் பிடித்தது, எலாஸ்டிக் லேடி, மிதக்கும் பெண் ஆகியவையே. இதுதவிர காலி பெட்டியிலிருந்து பெண்ணைவெளியே எடுப்பது குறித்து இப்போது தந்தையிடமிருந்து கற்று வருகிறார்.
வெறும் வித்தையோடு நிற்காமல் படிக்கவும் செய்கிறார் பாக்யநாத். மாஜிக்கை நம்பி படிப்பைக் கைவிட அவர் தயாரில்லை. இதுதவிர இசையும் தெரியும்.படமும் வரைகிறார்.
வேறென்ன சார் வேண்டும் இந்த இளம் குருத்து சகலகலாவல்லவனாகத் திகழ...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications