For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்-தி-ரா- காந்-தி-யின் விமா-னத்-தை ஓட்-டி-ய பைலட்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜெய்ப்பூர்:

Rajesh Pilotகாங்கிரஸ் தொண்டர்களிடையே, மரியாதைக்குரிய, புரட்சிக் குணம் மிக்கத் தலைவராக திகழ்ந்த ராஜேஷ்பைலட்டின் வாழ்க்கை, அவரது வேகமான செயல்பாடுகளைப் போலவே, மின்னல் வேகத்தில் முடிவுக்குவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் குஜ்ஜார் பிரிவைச் சேர்ந்தவர் பைலட். 55 வயதாகும் பைலட் ராணுவ சேவைக்குப் பிறகுஅரசியல்வாதியாக மாறியவர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். 1945 ம் ஆண்டு டெல்லியில்ஏழைக்குடும்பம் ஒன்றில் ராஜேஷ்வர் பிரசாத் சிங்காக பிறந்தவர் பைலட். அவரது தந்தை ராணுவத்தில்ஹவில்தாராகப் பணியாற்றியவர்.

மீரட் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றபின் இவர் ராணுவத்தில் சேர விரும்பினார். இதற்காக விமானம்ஓட்டும் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் தனது விருப்பப்படியே விமானப் படையில் பைலட்டாக சிலகாலம்பணிபுரிந்தார். அப்போது அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்லமாக பைலட் என்று பெயரிட்டனர். அதுவேஅவரது பெயராக பின்பு நிலைத்தது.

15 ஆண்டுகள் விமானப் படையில் பணிபுரிந்த இவர் போர் விமானங்களையும், போக்குவரத்து விமானங்களையும்ஓட்டி அனுபவம் பெற்றவர். வி.ஐ.பிகளுக்கான சிறப்பு விமானப் பாதுகாப்புப் பிரிவில் ஒருமுறை பைலட் இடம்பெற்றிருநதார். அந்தச் சமயத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற விமானத்தை ஓட்டிச் சென்றார்.அப்போது அவரது நட்பைப் பெற்றார் பைலட்.

இந்திரா காந்தியின் மனதில் இடம் பிடித்த பைலட், 1979 ம் ஆண்டு விமானப் படையைப் பணியைத் துறந்துஅரசியலில் குதித்தார். 1980 ம் ஆண்டு நடந்த லோக் சபாத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் தொகுதியில்போட்டியிட்டு வென்றார். 1985 முதல் தாசா தொகுதிக்கு மாறினார். இறுதி வரை இதே தொகுதியில் வெற்றி பெற்றுவந்தார். 6 முறை இத்தொகுதியின் எம்.பியாக அவர் இருந்தார்.

தொண்டர்களுடன் எளிதாகவும், சகஜமாகவும் பழகுவது, அன்னியோன்யமான அணுகுமுறை, யாரையும் எளிதில்கவரும் விதமான பேச்சு, தோற்றம் போன்றவை அவருக்கு பெரிய வட்டத்தை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொடுத்தது. விவசாயிகளின் நண்பராக விளங்கியவர்.

நினைத்த கருத்தைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தும் குணம் படைத்தராஜேஷ் பைலட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும் தனது கருத்தை வெளிப்படையாகக்கூறியவர்.

துடிப்பான தலைவராக விளங்கிய பைலட், நரசிம்மராவ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியவுடன்,தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் சீதாராம் கேசரி தலைவரானார். முயற்சியில் தோல்வியுற்றாலும்கூட தலைவர் பதவிக்குத் தகுதியான ஒரு தலைவராக உருவெடுத்தார் பைலட்.

அஸ்ஸாம் அமைதிக்கு வித்திட்டவர்: 1980-களில் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் போராட்டம் நடந்தது.பிரிவினைவாதிகள் மற்றும் மாணவர்களின் போராட்டம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் அதை சமாளித்துஅமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பைலட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது பணியைச் சிறப்பாகச் செய்தபைலட், அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட வழி வகுத்தார். இதையடுத்து 1983-ல் அங்கு சட்டசபைத் தேர்தல் சுமூகமானமுறையில் நடந்தது.

இதுதவிர போடா தீவிரவாதிகள் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படஉதவினார். யாருமே பேசத் தயங்கிய நிலையில் துணிச்சலுடன் தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசியவர் பைலட்.

அஸ்ஸாம் பிரச்சினையை பைலட் தீர்த்த விதம் அவருக்கு அரசியலில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது.இதேபோல, உள்துறை இணை அமைச்சராக இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுநடத்தியுள்ளார்.

உ.பி. மாநிலத்தில் பெரிய அளவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவினார்.அம்மாநில முதல்வர் என்.டி.திவாரியையும், பாரதிய கிஷான் சங்கத் தலைவர் மகேந்திர சிங் திகாயத்தையும் சந்திக்கவைத்து பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

சோனியாவை எதிர்த்தவர்: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்த பைலட், கட்சித்தலைமைக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர். எந்தக் கருத்துக்களையும் பகிரங்கமாகவும், தைரியமாகவும்கூறுபவர் பைலட்.

ராஜீவ் காந்தி மறைவுக்குப்பின் அரசியலில் நேரு குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத தலைவர்களில் இவரும்ஒருவர். சோனியாவின் அரசியல் பிரவேசத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவருவதையும் இவர் அறவே விரும்பவில்லை.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் 1985 முதல் 1989 வரை தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். 1991முதல் 1996 வரை நரசிம்மராவ் அமைச்சரவையில் உள்துறை மற்றும் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்தார்.உள்நாட்டுப் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்தபோது காபினட் அமைச்சர் சவானுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சுற்றுப்புறச் சூழல் துறைக்கு மாற்றப்பட்டார்.

தலைவர்கள் வருத்தம்: ராஜேஷ்பைலட்டின் அகால மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர்வாஜ்பாய், மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ராஜஸ்தான்முதல்வர் அசோக் கேலாட், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர்வி.பி.சிங் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ராஜேஷ் பைலட்டின் உடல் திங்கள்கிழமை டெல்லி கொண்டு வரப்படுகிறது. பைலட் விபத்தில் இறந்த செய்திகேட்டதும், அவரது மனைவி ஜெய்ப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவரை விமான நிலையம் வரை வந்துசோனியா காந்தி வழியனுப்பி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X