தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 மில்லியன் டன் உணவுப்பொருட்களை இந்தியா வழங்கும் என்று இலங்கை சென்றுள்ள இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கூறினார்.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் வகையிலும் இலங்கை சென்றுள்ளஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அங்கே அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோரைச்சந்தித்துப் பேசினார்.
இலங்கை அரசு அழைப்பு விடுத்ததின் பேரில் ஜஸ்வந்த் சிங் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார்.
அங்கே சென்ற அவர் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துப்பேசினார்.
பேச்சுவார்த்தை முடிவில் இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா உதவி செய்யும் என்று கூறினார்.
முன்னதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் டெம்பிள் ட்ரீஸ் பகுதியில் தங்களதுஇரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள்.
வெளியுறவுத் துறை அமைச்சரவையின் இணைச் செயலாளர் லீலா பொன்னப்பா, இலங்கைக்கான இந்தியத் தூதர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் இந்தப்பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர்.
முன்னதாக ஜஸ்வந்த் சிங் மற்றும் லட்சுமண்கதிர்காமர் ஆகியோருக்கிடையே நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியா-இலங்கை ஆகிய இருநாடுகளும் பலதரப்பட்ட விஷயங்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து விவாதித்தனர்.
பேச்சுவார்த்தை முடிவில் ஜஸ்வந்த் சிங் இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கு வாழும் மக்களுக்கு மனிதாபிமான முறையில்உதவி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக 100 மில்லியன் டன் உணவுப் பொருட்களை இந்தியா அளிக்கும். அங்குள்ள மக்களுக்காகநிதியுதவியும் அளிக்கும் என்றார்.
இலங்கை சென்றுள்ள அமைச்சர் ஜஸ்வந்த் சிங் திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு இந்தியா திரும்புகிறார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications