கோவை குண்டு வெடிப்பு: வழக்கு விசாரணை ஆரம்பம்
கோவை:
கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 167 பேர்விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்படுகிறார்கள்.
இதையடுத்து எந்த வித அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதபடி கோவை நகர் முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 98 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்பில்58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் உள்துறை அமைச்சர் அத்வானிஅதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக அல்உம்மா தலைவர் பாஷா, கேரள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மதானி உள்பட 181பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர் நிகழ்ச்சியாகநடந்த போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
167 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டனர்.
இவர்களில் 131 பேருக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டு விட்டன. மற்றவர்கள்குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் இந்தத் தொடர் குண்டு வெடிப்பு வழக்குவிசாரணை செவ்வாய்க்கிழமை கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதற்காக இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 167 பேரும் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.அசம்பாவிதச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்றவளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications