இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங்?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள், பாகிஸ்தானை வென்றபோட்டிகளின் முடிவுகள் முன்பே நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை இரு நாடுகளும் மறுத்துள்ளன.
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கிங் விசாரணைக் கமிஷன் முன்பு ஐக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் அலிபேச்சர் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார். அப்போது, இங்கிலாந்தில் நடந்த இரு போட்டிகளின் முடிவுகள் முன்பே நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்தியாவும், வங்கதேசமும், பாகிஸ்தான் அணியுடன் மோதிய போட்டிகளே அவை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட்வாரிய முன்னாள் தலைவர் மஜீத் கான் நியாயப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கிங் கமிஷன் முன்பு சாட்சியம் அளிக்கவும் தயார் என்று அவர் கூறியிருந்தார்.
பாகிஸ்தானுடனான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுவரை தொடர்ந்து நான்குபோட்டிகளில் பாகிஸ்தான் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, சூப்பர் சிக்ஸ் போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியாவென்றது.
பேச்சர் மற்றும் மஜீத் கான் கூறியுள்ள புகார் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் சபீர் ஹுசைன் செளத்ரி கூறுகையில், எங்களைப் பொருத்தவரை,பாகிஸ்தானுடனான போட்டியில் வங்கதேச வீரர்கள் நியாயமாகவும், முறையாகவுமே விளையாடினர். சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றோம்.
மேட்ச் பிக்ஸிங் பிரச்சினைக்கும், வங்கதேச அணிக்கும் தொடர்பில்லை என்று முன்பே கூறியிருந்தேன். அதையே இப்போதும் கூற விரும்புகிறேன்என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெயவந்த் லெலே கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் அப்போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டியகட்டாயத்தில் இருந்தன. இந்தச் சூழ்நிலையில் போட்டி முடிவை எப்படி பிக்ஸ் செய்ய முடியும்?
உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. எனவே இப்போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்றவைராக்கியத்தில் அப்போட்டியைச் சந்தித்து பாகிஸ்தான் என்றார் லெலெ.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அன்ஷுமன் கெய்க்வாட் கூறுகையில், அது பிக்ஸ் செய்யப்பட்ட போட்டிஅல்ல. பாகிஸ்தான் கடுமையாக போராடித் தோற்றது. போட்டிக்குப் பிறகு நான் பாகிஸ்தான் வீரர்களின் அறைக்குச் சென்றேன். அனைத்து வீரர்களும்மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தார்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications