மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விடுதலைப் புலிகள், மற்றும் இலங்கைஅரசுக்கிடையே, இந்தியா எந்தவித சமரச முயற்சிகளையும் மேற்கொள்ளாது. மாறாக,பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுக்கப்படும்என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
இலங்கை சென்றிருந்த ஜஸ்வந்த் சிங் திங்கள்கிழமை இரவு டெல்லி திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப்புலிகளுடன் இந்தியா பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதையசூழ்நிலையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே அவசியம் ஏற்படவில்லை. இலங்கையில்யாழ்ப்பாணம் வளைகுடாவில் நடந்து வரும் சண்டையில் இந்தியா தலையிடவிரும்பவில்லை.
இலங்கைப் பிரச்சினைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்புவதால் தீர்வு ஏற்பட்டுவிடாது. இலங்கை அரசு இதுவரை இந்தியாவிடம் ராணுவ உதவி கோரவில்லை.அமைதி காப்புப் படையை அனுப்பியது போல இம்முறையும் அனுப்ப இந்தியாதயாரில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.
இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த ஜஸ்வந்த் சிங், அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா, வெளியுறவுத் துறை லட்சுமண் கதிர்காமர் மற்றும் பல்வேறுதலைவர்களை அவர் தங்கியிருந்தார். தலைவர்களுடனான பேச்சு பலன் தருவதாகஅமைந்திருந்ததாக ஜஸ்வந்த் தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் கூறுகையில், இலங்கைப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியத் தரப்பில் மூன்று யோசனைகள்தெரிவிக்கப்பட்டுள்ளன.
1.இலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா உதவும். 2.நீடித்து வரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுவது. 3.அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை துவக்குவதற்கு உதவுவது ஆகிய மூன்று தீர்வுகளை இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரப்பகிர்வுக்கு முயலுமாறு இலங்கை அரசுக்குயோசனை தெரிவித்துள்ளோம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.
அதிகாரப்பகிர்வு குறித்த யோசனை மூலம், இலங்கையின் நிர்வாகத்தில் இந்தியாதலையிடுவதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்கு பலத்த வரவேற்பு உள்ளது. இந்தப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து முயற்சித்துவருகிறது.
யாழ்ப்பாணத்தில் போர்க்களத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் மற்றும்ராணுவத்தினரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு இந்தியாவின்உதவி கோரப்படவில்லை. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றம்தான்முடிவெடுக்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங் என்றார்.
ஜஸ்வந்த் சிங் பயணத்தின் இறுதியில், இந்தியா மற்றும் இலங்கை அரசின் சார்பில்கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் இலங்கையின் ஒற்றுமையைப்பாதுகாக்க இந்திய உதவும் என்று கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications