தமிழகத்தில் இன்று
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தயார் என்கிறது பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் தெரிவித்தார்.
ஓமனில் தனது இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மஸ்கட் திரும்புகையில்நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தினமும் போர் நடக்கிறது. போரில் பலர் கொல்லப்படுகிறார்கள்.இதனால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவுடன் சுமூகமான பேச்வார்த்தை நடத்தத் தயார்என்றார்.
முன்னதாக ஓமன் சென்ற முஷாரஃப் அந்நாட்டு அதிபர் கியூபாஸ் பின்னுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்துவிவாதித்தார். இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
அவர் தெற்காசியா நாடுகள் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கியூபாஸ்பின்னிடம் விரிவாகக் கூறி, காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்என்று கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கான கடற்பாதையை அமைக்கும் ஏற்பாடுகள் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார், ஓமன் வெளியுறவுத் துறைஅமைச்சர் யூசுப் பின் ஆல்வாய் பின் அப்துல்லா ஆகியோர் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
முன்னதாக -தெஹ்-ரானிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்தி ஒன்று, முஷாரப்இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே பல்லாண்டுகளாக இருக்கும் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பாகிஸ்தான் தயாராகஇருக்கிறது என்-று கூ-றி--யுள்-ள-து.
காஷ்மீர் பிரச்சனை இரு நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனை. இந்தத் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது இருநாடுகளின் கடமை என்று மு-ஷா-ரப் கூறியதாக அப் பத்-தி-ரி-கை-யில் கூ-றப்-பட்-டுள்-ள-து.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications