தமிழகத்தில் இன்று
பைலட்டின் ஜீப் மீது மோதிய பஸ் டிரைவர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் பைலட் சென்ற ஜப் மீது மோதிய பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணியிலிருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பஸ் டிரைவரின் பெயர் ராம்தன். இவருடன், சேர்த்து பஸ் கண்டக்டர் ரஞ்சித் சிங்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாநிலபோக்குவரத்து தலைமை அலுவலகத்திற்குத் தகவல் கொடுக்க அவர் தவறியதால் அவர் சஸ்பெண்ட் செயயப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்துஅவர் தலைமறைவாகி விட்டார்.
திங்கள்கிழமைதான் போக்குவரத்து அலுவலகத்திற்கு ரஞ்சித் சிங் வந்தார். அவரிடம் விசாரித்ததில், விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான்தூங்கியதாகவும், எனவே விபத்து எப்படி நடந்ததென்று தெரியாது என்றார்.
மாநில போக்குவரத்து அமைச்சர் சூகாராம் பகோலியா திங்கள்கிழமை இதுகுறித்துத் தெரிவித்தார்.விபத்து குறித்து முதுநிலை அதிகாரி ஒருவரின்விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர்-தாஸா-ஆக்ரா வழித்தடத்தில் பஸ் சர்வீஸை மாநில போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது.
விபத்துக்குப் பின் பஸ்சிலிருந்த 48 பயணிகளும் வேறு பஸ்சில் பரத்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த ஆறு பேர் தாஸா மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டனர்.
தாஸா சாலை தேசிய நெடுஞ்சாலையாகிறது:
இதற்கிடையே, ராஜேஷ் பைலட்டின் தொகுதியான தாஸாவுக்குச் செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ராஜ் நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பைலட்டின் தொகுதியான தாஸாவிற்குசெல்லும் 50 கிலோமீட்டர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும்.
இதுதொடர்பான திட்டத்தை தருமாறு ராஜஸ்தான் அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் அனுமதி கொடுத்துவிட்டார்.
பத்து நாட்களுக்கு முன்புதான் இதுதொடர்பான கோரிக்கை ஒன்றை பைலட் மத்திய அரசிடம் கொடுத்திருந்தார். தாஸா செல்லும் வழியில் உள்ள மோரல்ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என பைலட் கோரியிருந்தார்.
ஆனால் ஆறு, தேசிய நெடுஞ்சாலை எல்லைக்குள் வராததால், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பாலம் கட்ட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து அந்தப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கலாம் என்று பைலட் யோசனை தெரிவித்திருந்தார். தற்போது அது அமல்செய்யப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications