தமிழகத்தில் இன்று
மும்பை நோக்-கி வருகிறது கடத்தப்பட்ட இத்தாலி கப்பல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா அருகே கடந்த வாரம் கடத்தப்பட்ட இத்தாலி நாட்டுக் கப்பல் தற்போது மும்பைதுறைமுகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரக் காவல்படையின் செய்தித்தொடர்பாளர் மனோஜ் பாத்கர் இதுகுறித்துக் கூறுகையில், கப்பல் மும்பைதுறைமுகம் நோக்கி வந்து கொண்டுள்ளது. புதன்கிழமை மும்பை வந்து சேரும். கப்பலுக்குப் பாதுகாப்பாக இரண்டுஇந்திய கடலோரக் காவல்படை படகுகள் வந்து கொண்டுள்ளன.
இதுவரை கப்பலின் கேப்டன் உதவி எதுவும் கேட்கவில்லை. இந்தியச் சட்டத்தை மீறினால் மட்டுமே நாங்கள்கப்பல் கடத்தல் சம்பவத்தில் தலையிடுவோம். இதுவரை அசம்பாவித சம்பவமோ அல்லது அத்துமீறலோநடக்கவில்லை என்றார்.
ஈரானிலுள்ள பந்தர் இ அப்பாஸ் துறைமுகத்திலிருந்து கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை ஏற்றிக் கொண்டுகுஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்த இந்த இத்தாலி நாட்டுக் கப்பலை 10 ஈரானியர்கள் மற்றும்நான்கு ஈராக்கியர்கள் அடங்கிய கும்பல் வியாழக்கிழமை கடத்தியது. தங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில்அடைக்கலம் தர வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர். ஆனால் இதை ஏற்க ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன.
கண்ட்லா துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அசோல் குமார் ஜோதி கூறுகையில், கடத்தல்காரர்களுடன் பேச்சுநடத்த வசதியாக தற்போது மும்பை துறைமுகத்திற்கு கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்திய எல்லைக்குள் நுழைய கடத்தல்காரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.ஆனால் ஐ.நா. பிரதிநிதிகள்மற்றும் கப்பல் நிறுவனத்துருடன் பேச்சு நடத்த மும்பை துறைமுகம்தான் வசதியானது என்பதால் வர ஒத்துக்கொண்டனர் என்றார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
