தமிழகத்தில் இன்று
8 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குற்றப்பத்திரிகை வாங்க மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 8 குற்றவாளிகள் குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்க மறுத்து விட்டனர். இவர்கள் மலையாள மொழியில்குற்றப்பத்திரிக்கையை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை கோவை தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் முன்னிலையில் 167 அல் உம்மாதீவிரவாதிகள் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னை, கடலூர், மதுரை, பாளையம் கோட்டை, வேலூர் மற்றும் சேலம் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களில் சேலம் சிறையில் இருந்த 36 பேர் குற்றப்பத்திரிக்கை நகல்கள் பெறாமல் இருந்தனர். வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமானால்,அனைவரும் குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினார்.
இதையடுத்து 36 பேரில் 28 பேர் குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் 8 பேர் மட்டும் மலையாள மொழியில் குற்றப்பத்திரிக்கைநகல் கொடுக்க வேண்டும் எனக் கூறி, வாங்க மறுத்து விட்டனர். இவர்களுக்கு மலையாள மொழியில் நகல்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
நகல்கள் வழங்கப்பட்ட பின்னர், கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும்.
வெடிபொருள் சப்ளை செய்தவர் அப்ரூவர் ஆனார்:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 1.5 டன் வெடிமருந்து பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்து செய்யப்பட்ட ரியாஸ் உர் ரகுமான், அரசு தரப்புசாட்சியாக மாறினார்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் தயாரிக்கத் தேவையான வெடி மருந்துகள் மைசூரில் உள்ள இந்தியன் எக்ஸ்புளோசிவ் கார்ப்பரேஷனில்பெறப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. ஒன்றரை டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் இங்கிருந்து சப்ளை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் இருந்த ரியாஸ் என்ற ரியாஸ் உர் ரகுமானை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இவர் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் கூறினார்.
எனவே, நீதிபதி, அவரை அரசுத் தரப்பு சாட்சியாக ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, ரியாஸ் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் தனி வேனில் கொண்டு செல்லப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications