தமிழகத்தில் இன்று
இலங்கைப் பிரச்சினையில் ஜெ. நிலை என்ன?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சை:
இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் தற்போதைய நிலையை ஆதரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
தஞ்சையில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கைப் பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி மிகவும் குழப்பான மனநிலையில் இருக்கிறார். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகிறார். ஆனால் அதிமுக வைப் பொறுத்தவரை நாங்கள் மிகவும்தெளிவாகவே இருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் தற்போதைய முடிவை நாங்கள்ஆதரிக்கிறோம்.
இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் இம்முடிவு சரியானது என்று நம்புகிறேன். இலங்கையில் எழுந்துள்ளதனிநாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பதால் அந்நாட்டின் உரிமையில் தலையிடுவதாகத்தான் அர்த்தம்.மேலும் காஷ்மீர் பிரச்சனையில் வேறு நாடுகள் தலையிடக் கூடும் அபாயம் உள்ளது.
விடுதலைப்புலிகள் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகள் அல்ல. புலிகள் அமைப்பை இந்தியாவில்தடை செய்ய நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். அவர்களால் அங்கு வாழும் தமிழர்களுக்கு உரிமைகள்அனைத்தையும் பெற்றுத் தந்துவிட முடியாது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் அதிமுகவின் நிலை குறித்தும்கூட்டணி பற்றியும் தேர்தல் நேரத்தில்தான் வெளியிட முடியும்.
அதிமுக ஜெயித்தால் கூட்டணி ஆட்சி இல்லை:
தமிழகத்தில் அதிமுக வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் வாய்ப்பு கண்டிப்பாக இல்லை.
தனிக்கோர்ட்டில் என் மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் எங்கள் கட்சியைஎந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தல் வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டில் அதிமுக வுக்கு நல்ல எதிர்காலம்உள்ளது.
டெலிகாம் ஊழியர்களுக்கு இலவச டெலிபோன் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வளரும்நாடுகளில் இலவச சேவை பெருகிக் கொண்டே போனால் செலவை சமாளிக்க முடியாத அபாய நிலை ஏற்படக்கூடும்.
தேர்தலில் திமுக தோற்றுவிடும் நிலை ஏற்பட்டதால் அவர்கள் திடீரென்று இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை1991 ம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இலவசம் என்று தொடங்கி விட்டால் அதை மீண்டும் ரத்து செய்ய முடியாது.நாங்கள் இலவச மின்சாரம் என்பதை வேறு சலுகைகளாக வழங்கினோம்.
தொழிலதிபர்களின் பணத்துக்கு பல்வேறு அமைச்சர்கள் விலைபோய்விடுகிறார்கள். இது நியாயமற்றது. மத்தியில்ஆளும் பாரதிய ஜனதா அரசு செயலற்ற அரசாக விளங்குகிறது என்றார் ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications
