தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதுபோல தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் விசேஷ சலுகையும், அந்தஸ்தும் தரலாம் என்றுஇலங்கை அரசுக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகஇலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நார்வே நாடு அமைதித்தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறது.
இலங்கையின் பக்கத்து நாடான, இந்தியா, இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாண வேண்டும் என்று மட்டும் கருத்து தெரிவித்து வந்தது. தனி ஈழத்திற்கு ஆதரவுஇல்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குத் திடீர் விஜயம்மேற்கொண்டார்.
இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படாமல் அமைதித் தீர்வு காண்பது,தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம்மேற்கொள்வது, அமைதித் தீர்வுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவுவதுஆகிய மூன்று திட்டங்களை இலங்கை அரசிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் போல விசேஷ அந்தஸ்து, தமிழர்கள் வசிக்கும்பகுதிகளுக்குக் கொடுக்கலாம் என இலங்கை அரசுக்கு, இந்தியா பரிந்துரைசெய்திருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் காஷ்மீருக்கு அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் விசேஷ சலுகைதரப்பட்டுள்ளது. இதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் விசேஷஅந்தஸ்து தரலாம். அவர்களுக்கு சர உரிமையும் தரலாம். இதற்காக அரசியல் சட்டத்தில்திருத்தம் மேற்கொள்ளலாம். தேவைப்பட்டால் புதிய சட்டத்தையே இயற்றலாம்.
இதன் மூலம், இலங்கையில் பிரிவினை தவிர்க்கப்படும். தனி ஈழம் என்ற தமிழர்களின்கோரிக்கைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும். இலங்கையின் இறையாண்மையும்பாதுகாக்கப்படும் என்று ஜஸ்வந்த் சிங் தெரிவித்ததாக பத்திரிக்கைச் செய்திகள்தெரிவித்துள்ளன.
இந்தியாவின் காஷ்மீர் மாடல் கோரிக்கைக்கு இலங்கை அரசு, தமிழர் கட்சிகள்ஆகியோர் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்செய்து, விடுதலைப் புலிகளை போர் நிறுத்தத்திற்கு உடன்படச் செய்ய வேண்டும்என்று இலங்கை அரசை, பல தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்கேவிடமும் இந்த யோசனையைஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. பெர்னாண்டோகூறுகையில், இது நல்ல யோசனைதான். இருப்பினும் இந்தியாவின் திட்டம்முழுமையாக தெரிந்த பின்னரே எங்கள் கட்சி முடிவெடுக்கும் என்றார்.
புலிகள் ஏற்பார்களா?
இதற்கிடையே, இந்தியாவின் காஷ்மீர் மாடல் திட்டத்திற்கு, தனி ஈழம் கோரி போராடிவரும் விடுதலைப் புலிகள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்றுதெரியவில்லை.
தனி தமிழ் ஈழம்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. விசேஷ அந்தஸ்துபோன்ற தீர்வுகளால் தனி ஈழக் கோரிக்கை அடிபட்டு போய்விடும் என்பதால் இதைபுலிகள் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது.
மேலும், இந்தியாவின் புதிய யோசனைக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளசில கட்சிகளே ஆதரவு தராது என்றும் இலங்கை மக்களில் பெரும்பாலோர் கருதுவதாகதி ஐலன்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications