கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
கொழும்பு நகரில் எப்போதெல்லாம் பயங்ரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்களோ அப்போதெல்லாம், புதன்கிழமையையே விடுதலைப் புலிகள்தேர்ந்தெடுக்கின்றனர்.
கடந்த வாரம் புதன்கிழமை, கொழும்பு புறநகரில் நடந்த பேரணியொன்றில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு நபர், அமைச்சர் குணரத்தினே உள்ளிட்ட25 பேரைக் கொன்றார்.
இந்த புதன்கிழமை, கொழும்பு புறநகரான வட்டாலாவில், விமானப்படை பஸ்சில் மனித வெடிகுண்டு நபர் மோதி வெடிக்கச் செய்த வெடிகுண்டு விபத்தில், 5பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
இதே போல, ஜனவரி 5-ம் தேதி இலங்கைப் பிரதமரின் அலுவலகம் அருகே, பெண் விடுதலைப்புலி ஒருவர் மனித வெடிகுண்டாக வந்து வெடித்தார். இதில் 14பேர் இறந்தனர். 30 பேர் காயமடைந்தனர். இதுவும் ஒரு புதன்கிழமைதான் நடந்தது.
புதன்கிழமைக்கும், புலிகளுக்கும் உள்ள ராசியை இப்போதைய வலுப்படுத்துகிறது.
அமைதித் திட்டம் குறித்து தீவிர ஆலோசனை:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வந்து சென்றதன் தொடர்ச்சியாக, இலங்கைப் பிரச்சினைக்கான அமைதித் தீர்வு தொடர்பாக முக்கியஎதிர்க்கட்சித் தலைவர்களுடன் அதிபர் சந்திரிகா தீவிர ஆலோசனையைத் துவக்கியுள்ளார்.
புதன்கிழமை கூட்டப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், அமைதித் தீர்வுக்கான திட்டம் குறித்தும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய திட்டவரைவு குறித்தும் விவாதிக்கப்படவிருந்தது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இதுகுறித்து விவாதிக்க அதிபர் சந்திரிகா திட்டமிட்டிருந்தார். அதிபரின் வீட்டில் இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் காரு ஜெயசூர்யா தெரிவித்தார்.
1987-ல் அமைக்கப்பட்ட கவுன்சில் போல, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கவுன்சில் அமைக்கலாமா என்பது குறித்து அரசு யோசிப்பதாகதெரிகிறது.
அதிருப்தியில் முஸ்லீம்கள்:
இதற்கிடையே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இதுதொடர்பான திட்டத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஆனால், இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்றுதமிழ் கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இவை இரண்டையும் இணைத்து வட கிழக்கு மாகாண கவுன்சிலை உருவாக்க அவை கோரி வருகின்றன. ஆனால் தனியாக கிழக்கு மாகாண கவுன்சிலைஉருவாக்க வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு இந்த கவுன்சிலில் என்ன பொறுப்பு என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. விக்கிரமசிங்கே முன்புகூறுகையில், விடுதலைப் புலிகளின் ஆதரவுடன்தான் வட கிழக்கு மாகாணக் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை அமைதி உடன்பாட்டுத் திட்டத்தின் படி வட கிழக்கு மாகாணக் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டுதேர்தல் நடத்தப்பட்டது. வரதராஜ பெருமாள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை வெளியேறிய பிறகு இந்தக் கவுன்சில் கலைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications