தமிழகத்தில் இன்று
-செக்-கோஸ்-லோ-வாக்-கி-யா-வும்... செக்-கும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைக்கு இந்தியா 440 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதை பிரச்னையாக்கத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
மதுரையில் வியாழக்கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கைக்கு மத்திய அரசு 440 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: செய்தியாளர்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லும் போது பாதியை போட்டு விட்டு மீதியை போடாமல் விட்டு விடுகிறீர்கள். அதனால்எழுதி கொடுக்கலாமா என்று கூட நினைக்கிறேன். சென்னையில் பனகல் பூங்காவில் நான் பேசிய பேச்சில் பாதியை மட்டும் போட்டு விட்டு மறுபாதியை போடாமல் அதை பிரச்னையாக ஆக்கி விட்டீர்கள்.
கேள்வி: இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி ஆராய 15 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கப் போகிறதாமே?
பதில்: இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திகமுவின் கருத்து தெளிவானது. என்னுடைய பிறந்த நாள் விழா கூட்டத்தில் கூட அதை விவரமாக நான்கூறியிருக்கிறேன். இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பது தான் அன்றைக்கு நான் வெளியிட்ட முதல்ஆலோசனை. அப்படி வாழ முடியாத பட்சத்தில் தான் செக்கோஸ்லோவேகியா போல் பிரிந்து வாழலாம் என்று சொன்னேன்.
இது இரண்டாவது யோசனை. இதில் முதல் யோசனையை விட்டு விட்டு இரண்டாவது யோசனையான செக்கோஸ்லோவேகியாவை மட்டும் சில பேர்பிடித்துக் கொண்டு "செக்கு போல சுற்றி வருகிறார்கள். அதற்கு நான் பொறுப்பல்ல.
இப்போது இலங்கையில் அமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற குழு, இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் சம உரிமை பெற்று வாழ்வதற்கானமுதல் முயற்சியில் ஈடுபடும் என்று நம்புகிறேன். அப்படி ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
கேள்வி: இந்திய அரசு சார்பில் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை சென்ற பிறகு 440 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது பற்றி?
பதில்: அந்தத் தொகை ஆயுதம் வாங்குவதற்காக தரப்படுவதல்ல என்றும், உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக தரப்படுவதாகவும் வைகோவிடம்பிரதமர் வாஜ்பாய் கூறியிருக்கிறார். எனவே அதைப் பிரச்னையாக்க தேவையில்லை.
கேள்வி: இந்த பிரச்னை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பிரிவினை ஏற்படும் என்று சில கட்சிகள் சொல்கின்றனவே?
பதில்: மத்தியில் நிலையான ஆட்சி இருப்பதை அந்த சிலக் கட்சிகள் விரும்பவில்லை. எனவே குழப்பம் ஏற்படாதா என்று அலைகிறார்கள்.
கேள்வி: இலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதில் இந்திய அரசு ஒரு தெளிவான முடிவை அறிவிக்காமல் உள்ளது.நம்முடைய காவல் துறைக்கும் தடையிட உரிமை கிடையாது. கடற்படையினரும் ஒத்துழைக்காமல் இருக்கிறார்களே?
பதில்: இன்றைக்குக் கூட இலங்கை பகுதியிலேயே அகதிகளை இறக்கி விட்டுப் போய் இருக்கிறார்கள். அப்படி இறக்கி விடப்பட்டவர்கள் கடல் நடுவிலேதவிக்கும் போது அவர்களை காப்பாற்ற வேண்டிய நலை நமக்கு ஏற்படுகிறது. எனவே இந்திய கடற்படையினர் மேலும் அக்கறை செலுத்த வேண்டும்.இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கேள்வி: காவிரி பிரச்னையில் திமுக அரசு தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பது பற்றி?
பதில்: காவிரி பிரச்னையில் எந்தக் காலத்திலும் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு கெடாமல் உரிமைகள் நிலை நாட்டப்படும்.
கேள்வி: ஜெயலலிதா தனது சொத்துக்களை ஒப்படைக்கத் தயார் என்றும், நீங்கள் ஒப்படைக்கத் தயாரா என்றும் உங்களுக்கு சவால் விட்டுள்ளாரே?
பதில்: அந்த அம்மையாரால் எப்படி ஒப்படைக்க டியும்? அவரின் சொத்துக்கள் எல்லாம் நீதிமன்றத்தில் அல்லவா முடக்கப்பட்டுள்ளது. அவரால்ஒப்படைக்க முடியாது.
கேள்வி: குழப்பமாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறாரே?
பதில்: நான் இதற்கெல்லாம் லாவணி பாட விரும்பவில்லை.
கேள்வி: அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்போம் என்று ஜெயலலிதா சொல்கிறார். கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் என்று மூப்பனார்கூறுகிறார். இதைப் பற்றி?
பதில்: இரண்டு பேருடைய கருத்துக்கள் அவை.
கேள்வி: தமாகா மீண்டும் திமுக அணிக்கு வருமா?
பதில்: நான் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: ஜெயலலிதா பேசும்போது தான் நக்கீரன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் குற்றத்தை எடுத்துக் கூற தயங்க மாட்டேன் என்றும் கூறியிருப்பதுபற்றி?
பதில்: குற்றத்தை நீதிமன்றம் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநதி பேட்டி அளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications