கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லை என்கிறார் தமிழக காங். தலைவர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசலுக்கு இனி இடமிருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

திண்டிவனம் ராமமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவராகப் பதவியேற்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றபின் அவர் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களின் ஒத்துழைப்புடன் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காகவும், கட்சியைவலுப்படுத்துவதற்காகவும் போராடுவேன்.

முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மரகதம் சந்திரசேகர், குமரிஆனந்தன், எம்பி.சுப்ரமணியம், கேவி.தங்கபாலு ஆகியோரைச் சந்தித்துப்பேசினேன். அவர்கள் எனக்கு முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள்பணிகளை அமைதியாகவும், நுணுக்கமாகவும் செய்து வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் இனிமேல் கோஷ்டிப் பூசல் இருக்காது. காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக கோஷ்டிப்பூசல் இருந்து வந்தது. ஏனெனில்தொண்டர்களுக்கு கட்சிப் பணி கொடுக்கப்படாததே இதற்குக் காரணமாகும். மேல்மட்டம், கீழ்மட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல்எல்லாரும் ஒருமித்த கருத்துடன் வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்திப்பேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்மாற்றம் வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேர்தலில் வெற்றி பெறுவதே எங்களது நோக்கமாகும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியூர் சென்றுள்ளதால் அவர் திரும்பி வந்ததும் அவரைச் சந்தித்துப் பேசுவேன். அதிமுகவுடன் எங்களுக்கு உள்ளகூட்டு இப்போதைக்குத் தொடர்கிறது. எங்கள் நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில்இருக்கும்.

இலங்கைக்கு ரூ 450 கோடி நிதியுதவி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்தப் பணம் யாழ்ப்பாணம்மட்டுமின்றி இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற