தமிழகத்தில் இன்று
ஊடுறுவத் தயாராக காஷ்மீர் எல்லையில் 2500 தீவிரவாதிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் தீவிரவாதிகள் ஊடுறுவலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாகிஸ்தானின்முயற்சிகளை முறியடிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜே.ஆர்.முகர்ஜி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள15-வதுப் படைப் பிரிவின் தலைவராக முகர்ஜி உள்ளார். எல்லைப் பகுதியை பாதுகாப்பது மற்றும் ஊடுறுவல்காரர்களைத் தடுப்பதுஆகிய பணியில் இந்தப் படை ஈடுபடுகிறது.
செய்தியாளர்களுக்கு முகர்ஜி கூறியதாவது:
இந்திய பகுதிக்குள் ஊடுறுவுவதற்காக 2500 தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தயாராக உள்ளனர். இந்தியாவில் ரத்தக்களறியை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம். காஷ்மீரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பாகிஸ்தான் தற்போது நாடு முழுவதிலும்தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்ய திட்டமிட்டு வருகிறது.
இதற்காக, புதிதாக பல தீவிரவாதிகளை பாகிஸ்தான் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து வருகிறது. அவர்களுக்கு நவீன ஆயுதங்களையும் கொடுத்து நாட்டின்பல்வேறு பகுதிகளில் ஊடுறு வைத்துள்ளது. சில தீவிரவாதிகளுக்கு கையால் ஏவப்படக் கூடிய ஏவுகனைகளையும் கொடுத்துள்ளது.
கார்கிலில் படுதோல்வியுற்ற பின்னர், வேறு வழிகளை பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானின் எந்தவித சதிச் செயல்களையும் சமாளிக்கும்வகையில் ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.
மனித வெடிகுண்டுகளை முறியடிப்போம்:
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித வெடிகுண்டுகளை சமாளிப்போம்.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தீவிரவாதிகளுக்கு பயிற்சிஅளிக்கப்படுகிறது.
இவற்றில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முகாம்களில் 70 பேருக்கும், பாகிஸ்தானில் 42 பேருக்கும், ஆப்கன் எல்லையில் உள்ள முகாம்களில் 11பேருக்கும் பயிற்சி தரப்படுகிறது. மொத்தம் 3000 தீவிரவாதிகள் பல்வேறு பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
புது தீவிரவாத அமைப்புகளை உருவாக்குகிறது பாக்.:
தற்போது புதிதாக பல தீவிரவாத அமைப்புகளை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினரை திசை திருப்புவதற்காக இந்தத்திட்டத்தை பாகிஸ்தான் தீட்டியுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்திலின்போது தீவிரவாதிகளின் கோரிக்கையின்பேரில் விடுவிக்கப்பட்ட தீவிரவாதி மெளலானா மசூத் ஆசாத்துவக்கியுள்ள ஜெய்ஷ் இ முகம்மது என்ற தீவிரவாத அமைப்பு இதில் ஒன்று. இந்த அமைப்பு மொத்தம் 5000 பேரைத் தேர்ந்தெடுத்து தீவிரவாதப் பயிற்சிகொடுத்து வருகிறது. இவர்களில் பலர் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்ஆவர் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications