தமிழகத்தில் இன்று
தமிழக அமைச்சர்கள் உளருகிறார்கள்...ஜெ. ஆவேசம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காவிரி டெல்டா பகுதியில் நடக்கும் தூர் வாரும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளது. விவசாயிகளுக்குத் தரமான நெல்கள் கிடைப்பதில்லை. இதைச்சுட்டிக்காட்டினால் உளரும் பைத்தியக்கார அமைச்சர்கள், பிடுங்கும் ஓநாய்களாக அறிக்கை விடுகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா ஆவேச அறிக்கை விட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 10 நாட்களாக தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அங்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து உண்மைகளைக்கேட்டறிந்தேன். தூர் வாரும் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தஞ்சையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அங்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டால்தான் அங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்கும்தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள். இந்தக் கருத்துப் பரிசீலிக்கப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் நானும்வலியுறுத்தினேன். ஆனால் கருணாநிதி அமைச்சரவை சகாக்களோ நான் கெட்ட எண்ணத்தோடு அறிக்கை வெளியிடுவதாக உளருகிறார்கள்.
சான்றளிக்கப்பட்ட நெல்லிலும் குறைபாடுகள் உள்ளது. தஞ்சாவூரில் கபிஸ்தலம், அம்மாப்பேட்டை, சுவாமிமலை ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு விதைநெல் கிடைக்கவில்லை. காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் காட்டி ஆமணக்கு மீது மருந்து அடிக்கும் பணியிலும் கூட முறைகேடுகள்நடந்துள்ளது. கருணாநிதி கும்பல் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளது. தூர் வாரும் பணியில் பணம் வாரும் துரைமுருகன்களைக் கண்டித்து அறிக்கை விட்டால்அவர்கள் விழுந்து பிடுங்கும் ஓநாய்களாய் பதில் அறிக்கை விடுகிறார்கள்.
தூர்வாறாத இடங்களுக்கு தூர் வாரியதாகக் கூறி கருணாநிதியும், அவரது சகாக்களும் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் தூர் வாரும்பணியை பாராட்டாத விவசாயிகளே இல்லை என்று கருணாநிதி தனக்குத் தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொள்கிறார்.
ஏமாற்றும் திருடர்கள் தங்களை சத்தியத்தின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஊழல் நரிகள் உளருவது வெட்கக்கேடு. இனிமேலும்விவசாயிகளை ஏமாற்ற முடியாது.
மக்கள் நலப்பணியில் அக்கறை காட்டாத அராஜகக் கும்பல் என்னைப் பழி தூற்றியே விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவது மன்னிக்கமுடியாதகுற்றமாகும். தூர் வாரியதாக ஊரை ஏமாற்றும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் மமதையையும், செருக்கையும் வெட்டிச் சாய்க்க மக்கள்தயாராகி விட்டனர்.
மக்கள் பிரச்சனையில் அக்கறையோடு நாம் எடுத்துரைக்கும் கோரிக்கைகளை கூட கொச்சைப்படுத்தும் கொடியவர்கள் கோலோச்சத்தகுதியற்றவர்கள் என்பதை மக்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications