அசாருதீனுக்கு பாரதீய ஜனதா கண்டனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விஜயவாடா:
நான் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் என்மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள்கூறப்படுவதற்குக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகம்மது அஸாருதீன் கூறியிருப்பது தவறு என்றுபாஜக பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
விஜயவாடாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அசாருதீன் உள்பட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், தன் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்குத் தான் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவன் என்பதுதான் என்று அஸாருதீன் கூறியுள்ளார். இது தவறானது. யாரும் எதிர்பார்க்காதது.
அஸாருதீன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். அவரது திறமையால்தான் இந்தியஅணியில் இடம் பெற்றார். பின்னர் அணி கேப்டனாக உயர்ந்தார். ஆனால், அவர் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவர் என்பதாலோ, இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.
அஸாருதீனின் நம்பகத்தன்மையை யாரும் குறை கூறவில்லை. ஆனால், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்குசிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதுதான் என்று கூறுவதன் மூலம் அதற்கு அஸார் மதச் சாயம்பூசுவதை விரும்பவில்லை.
யாராக, எந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கஅவருக்கு போதுமான அவகாசம் தரப்படவேண்டும். அஸார் விஷயத்திலும் இது கடைப்பிடிக்கப்படும்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள தீன்ஷாவும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ஷானவாஸ்உசேனும் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை இங்கு நினைவுபடுத்த நான்விரும்புகிறேன் என்றார் வெங்கய்யா நாயுடு.
யு.என்.ஐ.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications