கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுக் கிராமம் செல்ல ஸ்பீட் தயார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:

பிஜித் தீவில் புதிய அதிபரை நியமிக்க ராணுவ ஆட்சியும், புரட்சியாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆயுதத்தை ஒப்படைத்து விட்டுகிராமத்திற்குச் செல்வேன் என்றும் ஸ்பீட் கூறியுள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு அருகே உள்ள பிஜித் தீவில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. ஜார்ஜ் ஸ்பீட் என்பவர்தலைமையில் நாடாளுமன்றத்துக்குள் புரட்சிப் படையினர் நுழைந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி, அமைச்சர்கள் உள்பட பலரைச் சிறைப்படுத்தினர்.

புரட்சிக்குப் பிறகு பிஜியின் ஆட்சி ராணுவத்தின் கைக்கு வந்தது. புரட்சிப் படைத் தளபதி ஸ்பீட்டுடன் ராணுவ ஆட்சியாளர்கள் பேச்சு நடத்தினர். அதன் பலனாகபலர் விடுக்கப்பட்டனர். இருப்பினும் பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 31 பேர் இன்னும் புரட்சிப் படையினரின் பிடியில் உள்ளனர்.

இந் நிலையில், ராணுவத்துக்கும் ஜார்ஜ் ஸ்பீட்டுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ராணுவத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் பிணைக் கைதிகளாக உள்ள பிரதமர் உள்பட 31 பேரையும் விடுவிப்போம் என்று ஸ்பீட் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ராணுவத்துக்கும் அவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிஜி நாட்டவரானமுன்னாள் அதிபர் ரத்து ஜோசெஃபா ஐலாய்லோவை மீண்டும் அதிபர் ஆக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

பேச்சு வார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்பீட், இப் பிரச்சினையில் மிகப் பெரிய தடைக் கல்லைத் தாண்டிவிட்டோம் என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி, நடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றுஅவர் கூறினார்.

எங்களிடமுள்ள ஆயுதங்கள் புதிய அரசிடம் ஒப்படைத்துவிடுவோம். நான் எனது கிராமத்துக்குச் சென்றுவிடுவேன் என்றார் ஸ்பீட்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற