கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டவர்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி படு டென்ஷனில் இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று,சோனியாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இதனால் டெல்லி தலைமை திண்டிவனத்தார் மீது கடும் கோபமடைந்தது. தலைவர் பதவி கிடைக்கவில்லை என்கிற கோபத்தில் உடனடியாகஅலுவலகத்தை காலிசெய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்தார் ராமமூர்த்தி. அதுமட்டுமல்ல சோனியாவுக்குஎதிராக ராமமூர்த்தி பேட்டி கொடுக்க, தலைமை ராமமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸுக்கு விளக்கம் அனுப்பிவிட்டாலும், டெல்லி யில் இருந்து இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வரும் நாட்களில் நடவடிக்கை வரும்என்கிறார்கள். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் த.மா.காவில் சேர திட்டமிட்டார் திண்டிவனம் ராமமூர்த்தி.
இந்த விஷயத்தை மூப்பனாரிடம், சந்தித்து தெரிவித்தாராம் திண்டிவனம் ராமமூர்த்தி. மூப்பனாரும் தேர்தல் சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றுசொன்னாராம்.
நீண்ட நாட்களாக டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் இருந்த மனக்கசப்பு, இப்பொழுது நீங்கி நல்லுறவு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில்சோனியாவைத் தாக்கி பேட்டி கொடுத்தவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சிக்கலில் கொண்டு சென்றவரை, த.மா.காவில் சேர்த்துக்கொண்டால்,மறுபடியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தம் மீதும் கோபப்படுவார்கள் என்று திண்டிவனத்தாரை த.மா.காவில் சேர்க்கும் எண்ணத்தைகைவிட்டுவிட்டாராம் மூப்பனார்.
திண்டிவனம் ராமமூர்த்தியை கட்சியில் சேர்க்கலாமா என்று த.மா.காவில் உள்ள சிலரிடம் மூப்பனார் கேட்க, கட்சிக்குள்ளிருந்து பலத்த எதிர்ப்புகிளம்பியதாம்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் இளங்கோவன், நிருபர்களிடம் பேசும்பொழுது, திண்டிவனம் ராமமூர்த்தியிடம், அவருடையநடவடிக்கைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் மேலிடத்தில் மன்னிப்பு கேட்டால் தான் அவரை நான் சந்திப்பேன். அதுவும் கூடவயதில் பெரியவர் என்கிற முறையில் தான் என்றிருக்கிறார் இளங்கோவன் .
மொத்தத்தில், த.மா.காவுக்கு சென்றுவிடலாம் என்கிற எண்ணத்தில் தான், காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்தார் திண்டிவனம்.இப்பொழுது அது நழுவிப்போக படு அப்சட்டாக இருக்கிறாராம்.
இனி எந்தக் கட்சிக்கு போகப்போறார்னும் புரியலைங்க என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் திண்டிவனத்தாரின் ஆதரவாளர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications