கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிரபாகரனின் பெற்றோரைப் பார்த்ததில் தவறில்லை - வைகோ
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாய், தந்தையை பார்த்ததில் தவறு எதுவும் இல்லை என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நடந்த மதிமுக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அடுத்த மாதம் ஈரோட்டில் மாநாடு நடத்தப் போகிறோம். இது சாதாரண மாநாடு அல்ல. மாநிலங்களுக்கு இடையேஒற்றுமையை வளர்க்கும் மாநாடு. காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தை விரட்டிய வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்குநன்றி தெரிவிக்கும் மாநாடு.
நாங்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட மாட்டோம். ஆனால், நேரம் கனிந்து வரும்போது அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இனிமேலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதுவும் காங்கிரஸ் அல்லாத கூட்டணிஆட்சியாக அது அமையும்.
காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் அதனுடைய சர்வாதிகாரம் தான். காங்கிரஸ் தற்போது இறுதி யாத்திரை சென்றுகொண்டிருக்கிறது. அது மாநிலத் தலைமைகளை மதிப்பதில்லை. அதனால் தான் உத்தரப்பிரதேசம்,ஆந்திரப்பிரதேசம் போன்ற தனது கோட்டைகளையே அக்கட்சி இழந்தது.
பிரபாகரனின் தாய், தந்தையர் திருச்சியில் 15 ஆண்டுகளாக எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது உடல்நலமில்லாமல் இருக்கின்றனர். அவர்களைப் போய் பார்த்து உடல் நலம் விசாரித்தேன். அதைச் சிலர்பெரிதுபடுத்துகிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள்.
பிரபாகரனின் தாய், தந்தையைப் பார்த்ததில் என்ன தவறு இருக்கிறது? ஏதாவது சூழ்ச்சி செய்து எங்களுக்குப்பிரச்சினை ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள். எந்த சூழ்ச்சியும் எங்களை ஒன்றும் செய்யாது.
ஜெனிவா மாநாட்டுக்குச் சென்று மனித உரிமைக் கமிஷனிடம் சிங்கள வஞ்சக திட்டத்தை விவரித்தேன். புகைப்படஆதாரங்களோடு எடுத்துரைத்தேன். நியாயத்தை எடுத்துச் சொன்னபோது சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும் என்றார் வைகோ.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications