கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
-க-ன-டா-வில் புலிகளுக்கு நிதி திரட்ட அர-சு தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டொரன்டோ:
கனடாவில் நிதி வசூல் செய்யவோ அல்லது பிரசாரத்தில் ஈடுபடவோ கூடாது என்றுகனடா அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழர் அமைப்புகளுக்குகன---டா அர-சு தடை விதித்துள்ளது.
இலங்கையில், வடக்கு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. தமிழ் ஈழத்தைத் தவிரவேறு எதற்கும் தயார் இல்லை என்று தீர்மானமான முடிவில் விடுதலைப் புலிகள்உள்ளனர். யாழ்ப்பாணம் வளைகுடாவில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கியுள்ளது.
உலகம் முழுவதிலிமிருந்து பல விடுதலைப் புலிகள்ஆதரவாளர்களும், இலங்கைத்தமிழர்களும் புலிகளுக்கு பணம் மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றனர்.அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால்,லண்டன் மற்றும் பிற நாடுகளிலிருந்து புலி ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் கனடா முன்னணியில் உள்ளது.கனடாவில்தான் இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கிருந்துதான்இதுவரை ரூ. 616 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ். பகுதியில் யுத்தம் வலுத்துள்ள நிலையில், புலிகள் ஆதரவாளர்களின்நடவடிக்கை கனடாவில் அதிகரித்திருப்பது குறித்து அந்நாட்டு அரசு கவலைஅடைந்துள்ளது. புலிகள் ஆதரவாளர்களின் பிரசாரமும், நிதி வசூலும் அதிகரித்துவிட்டதாக கனடா எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. எனவே புலிகள் ஆதரவுஅமைப்புகளைக் கட்டுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, கனடா தமிழர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மீது கனடா அரசு தீவிரகண்காணிப்பை அதிகரித்துள்ளது. இந்த கூட்டமைப்பு மூலம்தான் அதிக அளவு நிதிவிடுதலைப் புலிகளுக்குச் செல்வதாக தகவல் வந்துள்ளால், கூட்டமைப்பைக்கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பு குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. அதற்குப்பதிலளித்த நிதியமைச்சர் பால் மார்ட்டின், கனடாவுக்கு விரோதமான எந்தசெயலையும் அனுமதிக்க மாட்டோம். தீ-வி-ர-வா-தி-க-ளுக்-கு உதவ அனுமதிக்க முடியாதுஎன்றார்.
கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் ஓட்டு வங்கி மிகப் பெரியது. இதை இழக்கஎந்த அரசியல் கட்சியும் தயார் இல்லை. ஆளுங்கட்சியே இந்த ஓட்டு வங்கியைபெரிதும் நம்பியுள்ளது. இதன் காரணமாகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில்கனடா அரசு தலையிடாமல் இருந்து வந்தது.
ஆனால், இப்-பே-ாது இலங்கைத் தமிழர்கள் சமீபத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டுபேரணிகளை அரசு தடை செய்தது. பல கலாச்சார நிகழ்ச்சிகளும் தடைசெய்யப்பட்டன.
பள்ளிகளில் முன்பெல்லாம் புலிகள் ஆதரவு நாடகங்கள் நடத்தப்படும். தற்போதுஅவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. புலி ஆதரவு செய்திகள், படங்களைப்பிரசுரிக்க பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிதி திரட்டுவதை தடை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்றுகனடா வெளியுறவுத் துறை அமைச்சர் ஆக்ஸ்வொர்த்தி கூறியுள்ளார்.
உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் உதவியாக கனடா இருந்து வந்தது.தற்போது அரசின் கட்டுப்பாட்டால், விடுதலைப் புலிகளுக்கு பெரும் நெருக்கடிஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications