Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

கே: சென்னைக்கு வந்த கிருஷ்ணா நீரால், சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா?

ப: போலியோ சொட்டு மருந்து மாதிரி, கிருஷ்ணா சொட்டு நீர் வந்தது! இதனால் பிரச்சனை எப்படி தீரும்?

கே: அரசியல் ஒரு சாக்கடை. அரசியல் பத்திரிக்கையான துக்ளக்....?

ப: அந்த சாக்கடையை சுத்தம் செய்ய தெளிக்கப்பட்டுள்ள மருந்து என்றும் வைத்துக் கொள்ளலாம். சேற்றில் முளைத்த செந்தாமரை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

கே: அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் தலை கீழாக கட்டி வைத்து அடிக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து...?

ப: உண்மையாக இருந்தால் மிகவும் கண்டிக்கத்தக்கது. நடவடிக்கைக்குரியது. அப்பாவி தமிழர்களை, விளக்குக் கம்பத்தில் தூக்கில் போட்ட விடுதலைப்புலிகளின் செயல் எப்படி கண்டிக்கத்தக்கதோ, அதே போல இதுவும் கண்டிக்கத்தக்கது.

கே: வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக ஒரு கட்சி ஆரம்பிக்க இருக்கிறோம். அதற்கு நீங்கள் தலைவராக இருப்பதற்கு விருப்பமா? (வாய்ப்பைநழுவ விட வேண்டாம் என்பது எங்கள் ஆலோசனை)

ப: வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தே பழக்கப்பட்டுவிட்ட நான், இப்போதும் தியாகம் செய்கிறேன். தலைமைப் பதவி வேண்டாம். நீங்களேதலைவராக இருங்கள். நான் தொண்டனாகக் கூட இருக்க விரும்பவில்லை. இதை விட ஒரு தன்னலமற்ற தியாகத்தை நீங்கள் பார்த்ததுண்டா?

கே: முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று. ஈழ த் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் ம.தி.மு.க, சார்பாக நடத்த இருந்த பேரணியை வைகோஒத்திவைத்தது குறித்து...?

ப: என்ன பேரம் நடந்ததோ தெரியாது. ஆனால் பேரணியை ஒத்திவைக்க வைகோ சம்மதித்த பிறகுதான், முதல்வர் தனது செக்கோஸ்லோவேக்கியாகருத்தைக் கூறி, இலங்கை பிரவினைக்கு ஆதரவு தந்து பேசினார். வைகோ பேரணி வாபஸ் என்கிற காக்காய் உட்கார, முதல்வரின்செக்கோஸ்லோவேக்கியா பேச்சு என்கிற பனம் பழம் விழுந்ததா? அல்லது பேரம் நடந்ததா? தெரியவில்லை.

கே: எழில் மிகு சென்னை 2000 என்ன ஆனது...?

ப: மூன்றில் இரண்டு பங்கு சாதிக்கப்பட்டு விட்டது: இன்னமும் ஒரே ஒரு பங்குதான் சாதிக்கப்பட வேண்டும். எழில் மிகு சென்னை 2000 - என்பதில்சென்னை 2000 என்பவை சாதிக்கப்பட்டு விட்டன. எழில் மிகு மட்டும்தான் பாக்கி.

கே: திராவிடர் கழகம் எவரையும் புண்படுத்தும் இயக்கமல்ல: பண்படுத்தும் இயக்கம் என்று வீரமணி தெளிவாகக் கூறி விட்டரே! இதில் உங்களுக்குகுழப்பம் உள்ளதா?

ப: ஒரு குழப்பம் இல்லை. தெளிவாக இருக்கிறது. ராமர் படத்தை செருப்பால் அடித்து, ஹிந்துக்களை தி.க.வினர் பண்படுத்தினார்கள். குடுமிகளை அறுத்துபிராமணர்களை பண்படுத்தினார்கள். கன்னி மேரியை கேவலப்படுத்தி கிறிஸ்தவர்களை பண்படுத்தினார்கள் ... இப்படி இவர்கள் பண்படுத்திய போதெல்லாம்மற்றவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு இவர்கள் பொறுப்பா என்ன?

கே: தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா...?

ப: தெரியவில்லை. ஆனால் ஒன்று. விடுதலைப் புலிகள் விஷயத்தில், தி.மு.க. இரட்டை நிலை என்பதையும் தாண்டி, பல நிலைகளை எடுத்து வருகிறது. இதுமாநிலத்தின் எதிர் காலத்திற்கு அணுகுமுறை சற்றும் நல்லதல்ல. தி.மு.க. வின் இந்த ஊரை ஏமாற்றுகிற அணுகுமுறை தொடர்ந்தால் - ஆட்சிமாற்றத்தை தமிழக மக்கள் விரும்ப வேண்டும் என்று நான் விரும்புவேன்.

கே: ஈழத்தில் செத்து மடியும் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது தேசத் துரோகமா? என்று வைகோ கேட்கிறாரே...?

ப: ஈழத்தில் செத்து மடிகிற தமிழர்களுக்குக் குரல் கொடுப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது பொய். முன்பு சபாரத்தினமும் அவரைச் சார்ந்தநூற்றுக்கணக்கானவர்களும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட போது, செத்து மடிந்த தமிழர்களுக்கு இவர் குரல் கொடுத்தாரா? அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் போன்றவர்கள் செத்து மடிந்த போது, இவர் குரல் எழும்பியதா?

யாழ்ப்பாண மேயர்களும், பல தமிழ்த் தலைவர்களும் விடுதலைப் புலிகளால் சாகடிக்கப்பட்ட போது, செத்து மடிந்தவர்களுக்காக ஒலிக்கிற இக் குரல்மெளனமாகியதா? அல்லது உரக்க கூவியதா? ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் கொலை தண்டனை விதித்து தூக்கிலிட்டபோது, செத்து மடிந்த தமிழர்களுக்காக இவர் குரல் முணுமுணுக்கவாவது செய்ததா?

அப்போதெல்லாம் இவர் மெளனம் சாதித்து ஏன்? ஆக, செத்து மடிகிற தமிழர்களுக்காக எழும்புகிற குரல் அல்ல, இவருடைய குரல். விடுதலைப்புலிகளுக்காக மட்டும் சப்தமிடுகிற ஒலி பெருக்கியே இவருடைய குரல். இந்தியாவுக்கு விரோதமாகச் செயல்படுகிற அந்த இயக்கத்திற்குஆதரவாக எழும்புகிற குரல் - தேசத் துரோக சப்தமே.

கே: மனோஜ் பிரபாகர் செய்தது சரியா? தவறா? (ரகசியமாக வீடியோ எடுத்தது)

ப: குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டார். அதற்கு ஆதாரம் இல்லை. தன்னிடம் முன்பு, அந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரித்துப் பேசியவர்கள், பின் வாங்கத்தொடங்கி விட்டார்கள்: இந்த நிலையில் ஏதாவது ஆதாரம் அவருக்கு தேவைப்பட்டது. அதனால் அவர் செய்த காரியம் தான் இந்த வீடியோசமாச்சாரம். கெளரமான காரியமில்லைதான். ஆனால் ஆபத்துக்குப் பாவமில்லை - என்ற வகையில் சேர்க்கக் கூடிய, தற்காப்பு நடவடிக்கை அது.

கே: கட்டாய முழு அடைப்பு சட்ட விரோதம் - என்ற கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு, மார்க்சிஸ்ட் கட்சியும், பா.ஜ.க. வும் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளபோது, காங்கிரஸ் கட்சி அதை வரவேற்றுள்ளது பற்றி...?

ப: ஆயிரம்தான் சொன்னாலும், இன்றும் கூட, காங்கிரஸுக்கு அவ்வப்போதாவது வருகிற பொறுப்புணர்வு மற்ற கட்ச்சிகளுக்கு எப்போதுமேவருவதில்லை - என்று எடுத்துக்காட்டுகிற விஷயம் இது.

ஆர்ப்பாட்ட அரசியல் இல்லை என்றால் , தங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று பா.ஜ.க. வினரும், கம்யூனிஸ்டுகளும் நினைக்கின்றனர். மூன்றுமாநிலங்களில் ஆட்சி. ஒரு மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கு - என்று மட்டுமே காங்கிரஸ் வாய்ப்பு பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சி அரசியலை நடத்த வேண்டிய அவசியம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அதற்கு இருக்கிறது. அப்படி இருந்தும் ஆர்ப்பாட்ட அரசியலைவிலக்குகிற உத்திரவை அக்கட்சி வரவேற்றிருப்பது பாராட்டத்தக்கது.

கே: மேற்கு வங்காளத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், த்ரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வெற்றி பற்றி என்னநினைக்கிறீர்கள்?

பச குறிப்பிடத்தக்க முடிவு இது. தேர்தல் நடைபெற்ற தொகுதியில் , மார்க்சிஸ்ட் கூட்டணி பலமான பிரசாரம் செய்தது. வி.பி.சிங் போன்றவர்களும்பிரசாரம் செய்தார்கள். இதற்கு முன் நடந்த முனிசிபல் தேர்தல்களில், த்ரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கணிசமான வெற்றிகளைப் பெறவில்லை.

அப்படியிருந்தும் கூட, இப்போது தேர்தல் நடந்த பாராளுமன்றத் தொகுதியில், த்ரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வெற்றி, மம்தா பானர்ஜியின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பலனாகும். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கூட்டணியின் கோட்டைகளில் தேர்தல் நடந்த தொகுதியும் ஒன்று என்று செய்திகள்கூறியிருக்கின்றன.

அந்த இடத்திலேயே மார்க்சிஸ்ட்கூட்டணி தோற்கிறது என்றால் - அக்கட்சியின் கூட்டணி யின் செல்வாக்கு சரிகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதுஇயற்கையே. இந்த நல்ல செய்தி ஒருபுறமிருக்க. இத் தேர்தலில் தோல்வியுற்ற மார்க்சிஸ்ட் கூட்டணி, வ. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த குருதாஸ் தாஸ் குப்தாநல்ல பாராளுமன்ற உறுப்பினர். அவர் தோற்றது வருத்தத்திற்குரியதே.

கே: லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு நடந்து விட்டதே? இனி ராப்ரி தேவி பதவியில் தொடரலாமா?

ப: ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிற நேரத்தில் சம்பந்தப்பட்டவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை. ஏனெனில் அரசு தரப்பில்சுமத்தப்படும் அந்த குற்றச்சாட்டு, நீதிமன்றப் பார்வை உடையது அல்ல. ஆனால் நீதிமன்றமே குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் போது,குற்றச்சாட்டுகளில் ஓரளவு ஆதாரம் இருக்கிறது என்று ஆகிறது.

இது நீதிமன்ற பரிசீலனைக்குப் பின் நிகழ்வது. இப்படி நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவு செய்கிற போது, சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்வது தான்நியாயம் (சட்டம் அல்ல). இந்த என் கருத்தை, ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். இப்போது ராப்ரி தேவி பதவியில் தொடர்வது நல்ல மரபுகளுக்குஉகந்தது அல்ல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+