கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கோவை பாஜக எம்.பி. மீது வழக்குப் பதிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
சவ ஊர்வலத்தில் படம் எடுக்கச் சென்ற போலீஸ் வீடியோகிராபரைத் தாக்கியதாககோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் சோமசுந்தரம் (27),சுக்கிரவார்பேட்டையில் உள்ள ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தார். குடும்பப்பிரச்சினை காரணமாக திங்கள்கிழமை இரவு சோமசுந்தரம் விஷம் குடித்தார்.ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்இறந்தார்.
இரவு முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சோமசுந்தரத்தின் சடலம்அவரது உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.சோமசுந்தரத்தின் உடலை அவரது உறவினர்கள் எடுத்துச் செல்ல கோவை பாஜக எம்பிசி.பி. ராதாகிருஷ்ணன் உதவியுள்ளார்.
சோமசுந்தரத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்குராதாகிருஷ்ணன் சென்றார். அப்போது அங்கு பாலீஸ் வீடியோகிராபர் பங்கஜ்குமார்படம் பிடித்துக் கொண்டிருந்தார். படம் எடுக்கவேண்டாம் என்று சோமசுந்தரத்தின்உறவினர்களும் ராதாகிருஷ்ணனும் கோரினர். ஆனால் கமிஷனரின் உத்தரவில்லாமல்படம் எடுப்பதை நிறுத்த முடியாது என்று பங்கஜ்குமார் கூறிவிட்டார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் பங்கஜ்குமாரைத் தாக்கியது மட்டுமல்லாமல்அவரிடமிருந்த வீடியோ கேமராவையும் சோமசுந்தரத்தின் உறவினர்கள் பிடுங்கி கீழேபோட்டு உடைத்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பங்கஜ்குமார், கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இச் சம்பவத்தை அடுத்து அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகராதாகிருஷ்ணன் மற்றும் 35 பேர் மீது கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications