லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
மிகச்சிறிய வயதில் ஐஏஎஸ் படிப்பில் தேர்வு பெற்றுள்ளார் ஹேமலதா. இவருக்கு வயது 23 தான்.
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவரது சொந்த ஊர் விருதுநகர்.
அண்மையில் மூளையைக் கசக்கிப் பிழியும் ஐஏஎஸ் தேர்வு எழுதி தன்னால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்பதை நிருபித்து விட்டார்.
பொதுவாய் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஐஏஎஸ் வெறும் கனவாகவே போய்விடுவண்டு.
ஆனால் போராடி உயிரை விட்டுப் படித்து லட்சிய வெறியுடன் ஜெயிப்பவர்களும் உண்டு என்பதை நிருபித்து விட்டார் மதுரை ஹேமலதா.
யெஸ்.
இவர் மதுரை பாத்திமா கல்லூரியில் பிஏ சமூகவியல் படித்து முடித்து விட்டு ஐஏஎஸ் படிக்கத் திட்டமிட்டார்.
அதை தன் தந்தை பூவேல் தாய் பங்கஜத்திடமும் சொன்னபோது அவர்கள் நம்பிக்கையோடு இவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர்.
ஆனால் ஊக்கத்தைவிட இவர் சந்தித்த அவமானங்களும், ஏளனப் பேச்சுக்களும்தான் அதிகம்.
பிஏ படித்து ஐஏஎஸ் ஆ என்று விமர்சித்தவர்கள் தற்போது காணாமல் போய்விட்டார்கள்.
இவரது ஐஏஎஸ் கனவைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு நெத்தியடி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் பெண்களில் முதலாவது இடத்திலும்,இந்தியாவில் 10 வது இடத்திலும் வெற்றி பெற்று விட்டார்.
இவருக்கு முதலிலேயே வெற்றி கிடைக்கவில்லை. முதல் முயற்சியில் ஹேமலதா கண்டது தோல்விதான்.
அதற்குப் பின் வெறியுடன் படித்து சிகரத்தை அடைந்துவிட்டார்.
இதைப் பற்றி ஹேமலதா கூறுகையில் என், ஐஏஎஸ் கனவை வெளியில் சொன்னபோது எல்லாரும் எம்ஏ படித்து விட்டு ஐஏஎஸ் எழுது. அப்போதுதான்ஸ்டான்டர்டு இருக்கும் என்றார்கள்.
ஆனால் நானோ கண்டிப்பாய் ஜெயித்தே தீரணும்னு எந்நேரமும் படித்தேன். ஸ்கூல்ல படிக்கும்போதே நிறைய க்விஸ் புரோக்கிராம்ல கலந்திருக்கேன்.
டெல்லியிலுள்ள வாஜிராம் அன்ட் ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
எப்பவுமே புத்தகங்களைப் படித்துக்கொண்டேயிருப்பதால் எவ்வளவோ விஷயங்களை இழந்துட்டதா எல்லோரும் சொன்னாங்க. பட், நான் அப்படிநினைக்கவேயில்ல.
நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். என் அம்மாவும், அப்பாவும் கொடுத்த ஊக்கம்தான் இதற்குக் காரணம்.
எனக்கு கிராமப்புற மேம்பாட்டில் அதிக ஆர்வம் இருக்கு. கிராம மக்கள் மேம்பாட்டுக்காகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையிலும் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துவேன்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாகப் போய்ச்சேரும்படிப் பார்த்துக்கொள்வேன். என் அதிகாரத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுசெயல்படுவேன்.
கண்டிப்பாய் ஊழல் என்ற பிரச்சனை தலையிடாமல் பார்த்துக்கொள்வேன் என்றார் கண்களில் வந்த ஆனந்தக்கண்ணீரை துடைத்துக்கொண்டு உருக்கமாய்.
கன்ங்கிராட்ஸ் ஹேமலதா.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications