தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரார்த்தனைப் போராட்டம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

ஊதிய உயர்வு கோரி பிரார்த்தனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பலன்கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஊதிய உயர்வு கோரி கடந்த 10 நாட்களாக பிரார்த்தனைப் பிரச்சாரம் என்ற நூதனப் போராட்டத்தை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர். வேலையில் ஈடுபடாமல் பிரார்த்தனை மட்டும் செய்து வந்தனர் தொழிலாளர்கள். இதனால் தேயிலைத் தோட்டங்களில் பணிகள்பாதிக்கப்பட்டன.

இதையடுத்து ஊதியத்தை உயர்த்த தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். இதனால் புதன்கிழமையுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் விளங்கும் சிலோன் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியது.

ஒப்பந்தப்படி தினசரிக் கூலி தற்போதுள்ள 101 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் மூன்று தொழில்களில் ஒன்று தேயிலை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+