For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட்லி.. சட்னி..சாம்பார்.. மஞ்சுரி..சப்ஜி...நூடுல்ஸ்..

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஆஹா... ஜாமூன் ரொம்ப டேஸ்ட்...மிளகாய் பஜ்ஜி டாப்பா இருக்கு என்று நாம் வழக்கமாய் சப்பு கொட்டுவோம்.

சாப்பாடு என்றால் ஒரு கை பார்த்து விடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு நம்மில் பலர் இறங்கி விடுவதும் நம் அன்றாட நடவடிக்கைகள்.

ஆமாம்!

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்

அரைசாண் நாவிற்கு சுவையே பிரதானம்

இதுதவிர வாரத்துல 6 நாள்கள் வீட்டுச் சாப்பாடு. சன்டே மட்டும் ஹோட்டல் சாப்பாடு, மூவி. அங்கேயும் ஐஸ்கிரீம், சாக்லெட் என்று சமயம்கிடைக்கும் போதெல்லாம் வெட்டத் தவறுவதில்லை.

வெளிநாட்டிலும், வெளிமாநிலங்களிலும் வேலைக்குப் போய்விட்டு அங்கே நம்மூர் சாப்பாடு கிடைக்கலியே என்று புலம்புவதும் நம்மூர் மக்கள்ட்ட உள்ளஏக்கம். (அவர்கள் ஃபாஸ்ட் புட் என்று பசி க்கு எதையாவது சாப்பிட்டு வைப்பது வேற விஷயம்)

உங்களது ஏக்கத்தை தீர்த்து வைப்பதற்கென்றே காபி முதல் தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல், ஜூஸ் வகைகள், இனிப்பு காரங்கள் என்றுஎல்லாம் இந்தக் கிச்சன் கார்னர் வெப் பக்கத்தில் தொடர்ந்து வரும். படித்து சுவையுங்க!

கொஞ்சம் பொறுமை! பொறுமை ப்ளீஸ்!

சாப்பாட்டை நினைவுபடுத்தற மாதிரி நம்ம கிராமத்து ஸ்டைலில் ஒரு ஹைகூ

வேதனையை விறகாக்கி

சோதனையை சோறாக்கி

கவலையை கறியாக்கி

விதியென்னும் இலையினிலே பரிமாறி

நம் சொந்தங்களை (அதாங்க சாப்பாடு) தேடுவோம்

அவர்கள் எப்போது வருவார்கள்?

இந்த வாரம் ஒரு ஸ்வீட், ஒரு காரத்துடன் ஆரம்பிப்போம்.

கேரட் ஹல்வா:

தேவையான பொருட்கள்:

கேரட்: கால் கிலோ

சர்க்கரை: தேவையான அளவு

முந்திரிப் பருப்பு: தேவையான அளவு

உலர்ந்த திராட்சை: தேவையான அளவு

நெய்: 200 கிராம்

செய்முறை:

காரட்டை மிகச்சிறு சிறு துண்டுகளாக சீவி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை நீருடன் சேர்த்து கடாயில் கொதிக்கவைத்து பாகு செய்து கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை நெய் ஊற்றி பொன் நிறமாக வறுத்து வைத்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.

சீவி வைக்கப்பட்ட காரட்டை தயார் செய்து வைத்துள்ள பாகுடன் கலந்து கடாயில் போட்டு தொடர்ந்து கிளறி வரவேண்டும். (கிளறாமல் விட்டால் காடயில் ஒட்டிக் கொள்ளும்) அந்த கலவையில் நெய்யையும் ஊற்றிக் கிளறவும்.வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் போட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.(பாகில்லாமலும் செய்யலாம்)

அடுத்தது காலிஃபிளவர் சாப்ஜி

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் பெரிய பூ -1

தக்காளி 2 அல்லது 3

வெங்காயம் 2

இஞ்சி, பூண்டு சிறிதளவு

மிளகாய்தூள் 2 தேக்கரண்டி

தனியா தூள் 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் 1 சிட்டிகை

கரம் மசாலா பவுடர் 1 சிட்டிகை

தயிர் 1 கப்

மாங்காய் தூள் (தேவையான அளவு, ஃபுட் வேர்ல்டில் கிடைக்கும்)

முந்திரிபருப்பு, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய், சீரகம் தேவையான அளவு

செய்முறை:

காலிஃபிளவரை துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு கால்பாகம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி மிக்சியில் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது வேகவைத்த காலிஃபிளவரை எண்ணெயில் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் போட்டு வறுத்து அதில் வெங்காயத்தைப் போடவும். அதுபொன்னிறமாக ஆனதும் அதில் மிளகாய்தூள், தன்யா தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, மாங்கோ தூள், உப்புஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்திருந்த தக்காளியைப் போடவும். சிறிது நேரம் கிளறவும்.

சிவப்பு நிறமாக வரும். பின்னர் அதில் தயிரை விட்டுக் கிளற வேண்டும். இப்போது நன்றாகக் கொதிக்கவைக்கவும். அதில் வறுத்து வைத்திருக்கும் காலிஃபிளவரைக் கொட்டவும். காலிஃபிளவர் உதிர்ந்து விடாமல்மெதுவாகக் கிளறவும்.

காலிஃபிளவர் சப்ஜி ரெடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X