தமிழகத்தில் இன்று
கிருஷ்ணா நீர் வர வாய்ப்பில்லை என்-கி-றார் அமைச்-சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து நி ன்று போய் விட்டது. வருவதற்கும் தற்போது வாய்ப்பில்லை என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைருகன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
ஏப்ரல் மாத இறுதியில் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் கண்டலேறு - பூண்டி கால்வாய் மதகின் அடி மட்டத்திற்கு மேல் 2 மீட்டர் உயரத்திற்கு மேல்தண்ணீர் இருந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு மிகவும் மோசமான அளவில் இருந்ததினால், தமிழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திர அரசுகண்டலேறு நீர்த்தேக்கத்தினுள் உள்ள அணுகு கால்வாயை தூர்வாரி 3.5.2000 முதல் சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நீரை வழங்கியது.
இந்த ஏற்பாட்டின் மூலம் இதுவரை 100 மில்லியன் கன அடி தண்ணீர் பெற்றுள்ளோம். தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் கண்டலேறு - பூண்டிகால்வாயின் மதகு அடிமட்டத்திற்கு மேல் 140 மீட்டர் அளவே தண்ணீர் உள்ளது.
இதனால் தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து வினாடிக்கு 60 தல் 70 கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் கண்டலேறுவில் இருந்துதமிழகத்திற்கு விடப்படுகிறது.
இந்த தண்ணீர் வரும் வழியில் அதிகளவில் இறைக்கப்பட்டு, இழப்புகள் போக தமிழக எல்லையை அடைய முடியவில்லை. எனவே முற்றிலுமாக தண்ணீர்வரத்து நின்று போய் விட்டது.
தமிழகத்திற்கு கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் தற்போது நீர் மட்டம் தமிழக கால்வாயின் மதகின் அடிமட்டத்திற்கு 20 மீட்டர்கீழே உள்ளது.
இதனால் ஸ்ரீசைலம் அணையில் போதுமான அளவு நீர் வரத்து வந்த பின் நீர்மட்டம் போத்திரெட்டிப்பாடு மதகின் அடிமட்டத்திற்கு மேல் வந்தால் தான்தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும் கால்வாயின் மூலம் நீர் பெற முடியும்.
இதேபோல் சோமசீலா நீர்த்தேக்கத்திலும் தற்சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் பெறப்படும் சோமசீலா கண்டலேறு கால்வாயின் அடிமட்டத்திற்கு 3மீட்டர் கீழே நீர்மட்டம் உள்ளது. இதனால் சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்தும் கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு உடனடியாக தண்ணீர் பெற வாய்ப்பில்லைஎன்று கூறியுள்ளார் துரைமுருகன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications