தமிழகத்தில் இன்று
புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு சம்மதம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அமைதித் தீர்வு குறித்து விடுதலைப் புலிகளுடனும் பேச்சு நடத்த இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் ஆலோசைன நடத்திய அதிபர் சந்திரிகா அமைதித் தீர்வுத் திட்டம்ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைத்து இடைக்கால அரசை ஏற்படுத்த அவர்திட்டமிட்டிருந்தார். இருப்பினும் இதில் விடுதலைப் புலிகளுக்கு இடம் கிடையாது என்றும், இதுதொடர்பாக புலிகளுடன் பேச்சு நடத்த முடியாது என்றும் அவர்கூறியிருந்தார்.
சந்திரிகாவின் பிடிவாதப் போக்கு காரணமாக அமைதித் திட்டம் அமலாவதில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், விடுதலைப் புலிகளுடன் அமைதித்திட்டம் குறித்து அரசு பேச வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் புலிகளுடன் பேச சந்திரிகா இறங்கி வந்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேஆகியோரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. சந்திரிகாவும், விக்ரமசிங்கேயும் தலைநகர் கொழும்பில் சந்திரிகா வீட்டில் 3 மணி நேரம் ஆலோசனைநடத்தினார்கள்.
இந்த ஆலோசனைக்குப் பின் இவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி புதிய அரசியல் சட்டதிருத்தம் குறித்து விடுதலைப்புலிகளுடன் கலந்து பேசி முடிவுகாண்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை அமைச்சர் டிஎம்.ஜெயரத்னே இத்தகவலை நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய அரசியல் திருத்த சட்டத்தை விடுதலைப்புலிகளிடம் சமர்பித்த பிறகு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என்று இருதலைவர்களும் தீர்மானித்து இருக்கிறார்கள் என்றார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்குப் பகுதியில் தனிநிர்வாகம் கொடுப்பதற்கு ஆரம்பத்தில் இலங்கை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது.தற்போது தன் நிலையை மாற்றிக்கொண்டு அதிபர் சந்திரிகாவிடம் இதுகுறித்து ஒப்பந்தம் செய்திருப்பது முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications