தமிழகத்தில் இன்று
பா-கிஸ்-தா-னில் ரா-ணு-வத் -த-ள-ப-தி? ம-றுக்-கி-ற-து இலங்-கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கை ராணுவத் தளபதி ஸ்ரீலால் வீரசூர்யா பாகிஸ்தானுக்குச் சென்றதாக வெளியான செய்திகளை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னாண்டோ கூறுகையில், இந்தச் செய்தியில் உண்மையில்லை. பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக இப்போதைக்குத்திட்டம் இல்லை என்றார் அவர்.
இதற்கி-டை-யே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்த இரு நாட்களில் நடந்த மோதல்களில் எட்டு விடுதலைப் புலிகள்இறந்-த-தா-க ரா-ணு-வம் அறி-வித்-துள்-ள-து.
யாழ்ப்பாணத்தின் பொன்னார் பகுதியில் விடுதலைப் புலிகள் படை மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் நான்கு புலிகள் இறந்தனர். 2 வீரர்கள் இதில்காயமடைந்தனர்.
அதே பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
வவுனியாவில் உள்ள மருதமேடு பகுதியில் நடந்த மோதலில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். கிழக்கு மட்டக்களப்பில் நடந்த மோதலில் ஒருவிடுதலைப் புலி இறந்தார் என்-று ரா-ணு-வம் கூ-று-கி-ற-து.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications