தமிழகத்தில் இன்று
"சூப்பர் பாஸ்ட்" ரயிலாக மாறுகிறது சதாப்தி எக்ஸ்பிரஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
கோவையிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஜூலை 1 ம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுகிறது. இதற்கானகட்டணமும் குறைக்கப்படுகிறது.
கோவை-சென்னை:
கோவை சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் சேலம் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ரயில் தற்போது சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படவுள்ளது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் குளிர்சாதனப்பெட்டி வசதியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கட்டணமும் அதிகமாக இருப்பதால் அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களால்பயணம் செய்ய முடிவதில்லை.
மேலும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், உயர்அதிகாரிகள் மட்டுமே பயணம் செய்ய முடிகிறது.
இதனால் இந்த சதாப்தி எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்செய்யப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரயிலும் சதாப்தி ரயில் செல்லும் அதே வேகத்தில்தான் செல்லும். நேரத்திலும் மாற்றம் இல்லை.
முதல் வகுப்பு ஏசி இருக்கை வசதி, இரண்டாம் வகுப்பு என்ற 2 வகுப்புகள் மட்டுமே இருக்கும். பகல் நேர ரயில் என்பதால் தூங்கும் வசதி இருக்காது.
இந்த ரயில் காலை 6.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 8.32 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும்.
அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.35 க்குச் சென்றடையும்.
மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 7.03 மணிக்கு சேலத்தை வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மீண்டும்கோவை சென்றடையும்.
கட்டணம்: சூப்பர் பாஸ்ட் ரயிலில் முதல் வகுப்புக் கட்டணம் சென்னை -சேலத்திற்கு ரூ 302. சேலம் கோவைக்கு ரூ 212.
இரண்டாம் வகுப்பு கட்டணம் சென்னை-சேலம் ரூ 106. சேலம்-கோவைக்கு ரூ 73 ஆகும்.
இந்த ரயில் சேலம், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications