மேட்ச் பிக்ஸிங்: சிபிஐ பிடியில் சிக்காமல் தப்பிவரும் முகேஷ் குப்தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாஇன்னும் சிபிஐ பிடியில் சிக்காமல் உள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டை மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் சீர்குலைத்து வருகின்றன. மேட்ச்பிக்ஸிங் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸிகுரோனியேவிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையின்போது, இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா என்பவரை இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அறிமுகப்படுத்தியதாக குரோனியே தெரிவித்தார்.
இதையடுத்து, டெல்லியில் நகைக் கடை வைத்துள்ள முகேஷ் குமாரிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முயன்றனர்.ஆனால், அதற்குள் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எங்கோ சென்றுவிட்டார். தற்போது அவர்எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.
முகேஷ் குப்தாவின் தந்தையிடம் நடத்திய விசாரணையிலும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.முகேஷ் குப்தா தலைமறைவாகவில்லை. அவர் தற்போது தனது குடும்பத்துடன் விடுறையில் உள்ளார். சிபிஐகேட்டுக் கொண்டால் அவரைத் தேவைப்பட்ட நேரத்தில் ஆஜர்படுத்துவதாக முகேஷ் குமாரின் வழக்கறிஞர் வினீத்மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
முகேஷ் குப்தாவிடம் விசாரணை நடத்தப்பட்டால்தான் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குமுழுமையான விடை கிடைக்கும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications