தமிழகத்தில் இன்று
தீயசக்தி-யும்..தமிழ் மாநி-ல காங்-கி-ர-சும்..
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டில் மீண்டும் தீய சக்தியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றுஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பேசிபரபரப்பை ஏற்படுத்தினார் த.மா.கா. எம்.எல்.ஏ. ரங்கநாதன்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியுடன் சந்திக்கக்காத்திருக்கிறது த.மா.கா. அதன் தலைவர் மூப்பனாரும், ஜெயலலிதாவும் அதற்கானபேச்சு வாரத்தையில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் இடையில் இரு கட்சிகளும்இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா அல்லது அ.தி.மு.க. தலைமையில் தனியாட்சிஅமைப்பதா என்ற பேச்சுவராத்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நியிைல் த.மா.கா வின் முண்ணனி தலைவரான முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின்தீவிர ஆதரவாளரும், கட்சியின் முன்னோடி எம். எல்.ஏ. க்களில் ஒருவருமானரங்கநாதன், தி.மு.க. ஆதரவுப் போக்கில் திடீரென்று இறங்கியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவாஜி மகன் திருமணம் நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திருமண விழாவில் ரங்கநாதனும் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசியல் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு கூட, ஆளும்கட்சி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார்.தேர்தல் பற்றி அவர்களிடம் கருத்து கேட்கப்போகிறார் என்று பத்திரிக்கைகளில் செய்திவெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் நான் முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்விடுக்கிறேன்.
எந்த சூழ்நிலையில் எது நடந்தாலும், என்ன நடந்தாலும் தமிழ்நாட்டில் மீண்டும் தீயசக்தியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் . இதுதான் அவருக்கு நான்விடுக்கும் வேண்டுகோள் என்று ரங்கநாதன் பேசினார்.
பெயரைக் குறிப்பிடாமல் ஜெயலலிதாவை அவர் தீய சக்தி என்று வர்ணித்தார்.தி.மு.க.வுடன் தோழமை கொண்டிருந்த காலத்தில் ஜெயலலிதாவை தீயசக்தி என்றேத.மா.கா. அழைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications