தமிழகத்தில் இன்று
ஈழ மக்களின் வெற்றியை தடுத்தால் விபரீத விளைவு: வைகோ எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விழுப்புரம்:
ஈழ மக்களுக்கு கிடைக்கும் நியாயமான வெற்றியை எதிர்க்கும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது என்று தமிழக இளைஞர்கள் சிந்திக்கஆரம்பித்தால் எதிர்காலத்தில் இந்திய அரசுக்கு எதிராக கசப்புணர்வு ஏற்படும்.
இதனால் எங்களால் கூட தடுக்க முடியாத விபரீத விளைவுகள் ஏற்படும் என்று வைகோ கூறினார்.
கரியாலூரில் மதிமுக சார்பில் பயிறசிப் பாசறைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
பயிற்சியில் கலந்து கொண்ட 300 பேர் மூலம் 3000 பேரை உருவாக்க முடியும் . அந்த நோக்கத்தில் தான் இந்தப் பயிற்சி நடந்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான்வெல்ல முடியும்.
மதிமுக வில் வாழ்பவர்கள் எல்லாம் கொள்ளைக்காக வாழ்பவர்கள். நமது இயக்கம் லட்சியத்திற்காக உயிரையும் கொடுக்கும் வீர வாலிபர்கள்கொண்ட இயக்கம்.
அவசரக்காரர்கள் யாழ்ப்பாணம் பிடிப்பது என்னாச்சு என்று கேட்பார்கள். உயிரைக் கொடுத்துப் போராடும் அவர்களுக்கல்லவா தெரியும் அவர்களதுகஷ்டம்.
நாங்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் யாருக்கும் தீவிரவாத எண்ணம் இருந்தால் அவர்கள் யாருக்கும் இங்கேஇடமில்லை.
ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான வெற்றியை இந்தியா தடுக்கிறது என்ற எண்ணம் தமிழக இளைஞர்களுக்கு ஏற்பட்டால்அவர்களுக்கு இந்திய அரசு மீது கசப்புணர்வு ஏற்படும்.
அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டால் எங்களால் கூட தடுக்க முடியாத விபரீத விளைவுகள் இந்திய அரசியலில் ஏற்படும்.
எப்படியாவது ஆட்சியைப்பிடித்து விட வேண்டும் என்று நாம் கட்சியை நடத்துவதில்லை. கொள்கைக்காக உயிரைக்கொடுக்கும் இயக்கம் நம் இயக்கம்.
ஈழத்திலே தமிழர்கள் வெல்வார்கள். அது வரலாற்றின் கட்டாயம்.
இவ்வாறு வைகோ பயிற்சிப்பாசறைக் கூட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications