For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மருத்துவக் கல்லூரிக-ளில்- சேர தமி-ழ-கத்-தில் -க-டும் --பாட்-டி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழக மாணவர்களிடையே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர க-டும் போட்-டி -நி-ல-வு-கி-ற-து.

இவ்வாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் பட்டப் வகுப்புகளில் சேர 12,700 மாணவ மாணவிகள்விண்ணப்பித்துள்ளனர்.

இது தவிர, "பாரா-மெடிக்கல் கோர்ஸஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக 8,900 விண்ணப்பங்கள்வந்து குவிந்துள்ளன.

மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை தேர்வு செய்வதற்கென்றே தனித் தேர்வுக் குழு செயல்பட்டு வருகிறது.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் மற்றும்துணை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆயிரக் கணக்கில் வந்து குவிந்துள்ளன என்று தேர்வுக் குழுஅலுவலகம் தெரிவித்தது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மட்டும் 12 ஆயிரத்து 700 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது ஒரு இடத்திற்கு 12 பேர் வரைபோட்டியிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,155 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில் 158 இடங்கள் மத்திய அரசு நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும். சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 71 இடங்கள்ஒதுக்கப்படும். தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சென்றஆண்டில் 31 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன. அதேபோல் இந்தாண்டும் ஏற்படுத்தப்படுகிறது.

திருச்சியில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சேலம் விநாயகாமருத்துவக் கல்லூரிக்கும், இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. தலா 100 இடங்கள்கொண்டவை இக்கல்லூரிகள். திருச்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்கள் தேர்வுக் குழுவால் தரப்பப்படும்.

சேலம் விநாயகா மருத்துவக் கல்லூரி தனியாரால் துவக்கப்படுவதால் 50 இடங்கள் குறைந்த கட்டணப் பிரிவின்அடிப்படையிலும், 35 இடங்கள் உயர் கட்டணப் பிரிவு அடிப்படையிலும்நிரப்பப்படும்.

பல் ம-ருத்-து--வ படிப்-பு:

அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் உள்ளன. இவ்வாண்டு முதல் கன்னியாகுமரியில் செயல்பட உள்ள மூகாம்பிகைபல் மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து 10 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் குறைந்தக் கட்டணபிரிவில் 325 இடங்களும், உயர் கட்டணப் பிரிவில் 235 இடங்களும் நிரப்பப்படும்.

பி.பார்ம்:

பி.பார்ம் படிப்புக்காக அரசுக் கல்லூரிகளில் 56 இடங்கள் உள்ளன. இதில் 6 இடங்கள் சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகஒதுக்கப்படுகிறது. மீதியுள்ள 50 இடங்களும் அரசின் இட ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நரப்பப்படும். தனியார் நடத்தும்கல்லூரிகளில் பி.பார்ம் படிப்புக்கு குறைந்த கட்டண பிரிவில் 870 இடங்களும், உயர் கட்டணப் பிரிவில் 599 இடங்களும்உள்ளன.

பிஸி-யோ-தெ-ரா-பி:

பிஸியோதெராபி படிப்புக்கு அரசுக் கல்லூரிகளில் 50 இடங்கள் உள்ளன. இதில்2 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.தனியார் கல்லூரிகளில் 950 குறைந்த கட்டண இடங்களும், 650 உயர் கட்டண இடங்களும் உள்ளன.

பி.எஸ்.சி. நர்-சிங்:

பி.எஸ்சி நர்சிங் படிப்புக்காக அரசு கல்லூரிகளில் 25 இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் சிறப்பு பிரிவினருக்கு. தனியார்கல்லூரிகளில் 660 குறைந்த கட்டண இடங்களும், 480 உயர்க் கட்டண இடங்களும் உள்ளன.

ஆக்-கு-பே-ஷ-னல் தெரா-பி:

ஆக்குபேஷனல் தெரபி பட்டப்படிப்பு தனியார் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இக்கல்லூரிகளில் 112 குறைந்த கட்டணஇடங்களும், 80 உயர் கட்டண இடங்களும் உள்ளன.

இந்த நான்கு துணை மருத்துவப் படிப்புகளுக்கு 8900 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவம், பல் மருத்துவம், துணை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான "கவுன்சிலிங் 29ம் தேதி துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுக் குழு அலுவலர்கள் கூறுகையில், ""மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு வரும்மாணவர்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ரூ.ஆயிரத்திற்கும், சுயநதிக் கல்லூரிகளுக்கானகவுன்சிலிங்கிற்கு வருபவர்கள் ரூ.5 ஆயிரத்திற்கும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் ரூ.2500க்கு டிமான்ட் டிராப்ட் (டி.டி.) எடுத்துவரவேண்டும்.

இந்-த டி.டிக்-கள் செயலர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு எடுக்-கப்-ப-ட வேண்டும் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X