தமிழகத்தில் இன்று
மூன்றாவது அணி உறுதியாக இருக்-கி--ற-து, நம்-புங்-க.. என்-கி-றார் தேவ கெளடா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எங்களது மூன்றாவது அணி வலுவான நிலையில் உள்ளது என்று உறுதிபடச் சொல்கிறார் முன்னாள் பிரதமர் தேவகெளடா.
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவராக இருக்கும் தேவ கெளடா தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம்செய்வதற்காக வந்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
செய்தியாளர்களுக்கு கெளடா அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: மூன்றாவது அணி தற்போது எந்த நிலையில் உள்ளது?
பதில்: எங்களது அணி எப்போதும் போல் வலுவான நிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தற்போதுமும்பையில் இருக்கிறார். அவர் டெல்லி வந்ததும் எங்களது மூன்றாவது அணித் தலைவருடன் கலந்து பேசிஎங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். குறிப்பாக தற்போதைய அரசின் மக்கள் விரோதபோக்கு குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்களின் முக்கியக்குறிக்கோள்.
கேள்வி: இலங்கை பிரச்னை குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இலங்கைப் பிரச்னை குறித்து பல்வேறு கட்சியினரும் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர்.நீண்ட நிாள் பிரச்னையான இதற்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
கேள்வி: காஷ்மீர் பிரச்னை குறித்து தங்களின் கருத்து என்ன?
பதில்: இதுவும் நீண்ட நாளைய பிரச்னை. இந்திரா காலத்தில் இருந்தே பிரச்னை தீர்க்க முடியாமல் தான் இருந்துவருகிறது. இதுகுறித்து தற்போது நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.
கேள்வி: பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை பற்றி...?
பதில்: குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தற்போதைய பொருளாதாரத் திட்டம் பெரும் குழப்பமாகத் தான்இருக்கிறது. அரசின் தவறான அணுகுமுறையால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. தனியார்மயம் என்ற பெயரால் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை தாரை வார்க்கும் முயற்சிநடக்கிறது. இந்நிலை நீடித்தால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.
கேள்வி: பாஜக அரசு ஐந்தாண்டுகள் நீடிக்குமா?
பதில்: ஐந்தாண்டுகள் ஆண்டுவிட்டு போகட்டுமே. எங்களுக்கொன்றும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,வாஜ்பாய் அரசு மறைமுகமாக மதவாத சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து, சிறுபான்மையினருக்கு அநீதிஇழைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மதவாத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்என்றார் கெளடா.


Click it and Unblock the Notifications
