முகத்தில் தெளித்த சாரல்...

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா: நிலக்கரிச்சுரங்கத்தில் வெடி விபத்து: 10 பேர் பலி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாக்பூர்:

மகாராஷ்டிராவில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் சந்திராப்பூர் மாவட்டம் வெஸ்ட்டர்ன் கோயல்பீல்டு லிமிடெட் நிலக்கரிச்சுரங்கத்தில் சனிக்கிழமை இரவு இவ்விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள ஊழியர்கள் இரண்டாவது ஷிப்டில் வேலையில் ஈடுபட்டிருந்த போது இவ்வெடிவிபத்து ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் இறந்தோரின் சடலங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது.

எச்.என்.ஹாடு, பாண்டுரங்கன், மில்மேல், ஷோகுலால், ராஜேந்திர யாதவ், தேவானி, ஹோடே, பாபன் நாகர்லே, திவாரி, விக்ரம் பான்டே ஆகியோர்இவ்விபத்தில் இறந்தவர்கள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விபத்தில் காயமடைந்தோர் ஐந்து பேரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+