தமிழகத்தில் இன்று
ஊ-ட்-டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடப்படுகிற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கடனில் தத்தளிக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை மூட நிதிசீரமைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இதற்கான நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளிலேயே போட்டோபிலிம் உற்பத்திக்கென உள்ள ஒரே நிறுவனமாகஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் (எச்.பி.எப்) நிறுவனம் திகழ்கிறது.இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்தநிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.கடந்த 93ம் ஆண்டு வரை நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த நிறுவனம், கச்சாப்பொருட்களின் விலை உயர்வு, இறக்குமதி ஆகியவற்றால் நஷ்டமடையத்தொடங்கியது. இருந்தாலும், நிர்வாகச் சீரமைப்பு மேற்கொள்ளப்படாததால், மேலும்நலிவுற்றது எனக் கூறப்படுகிறது.
எச்.பி.எப் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டபோது, இதில் 8 ஆயிரம்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக பார்வையற்றவர்கள்இதில் பணியாற்ற பெரும் வாய்ப்பு கிடைத்தது. வெளிச்சம் படாமல் இருட்டிற்குள்பிலிம்களை கையாளும் வேலையால் பார்வையற்றோர் பயனுற்றனர்.
ஆனால், தற்போது புதிய கலர் உற்பத்தி பிரிவு துவங்கப்பட்ட பின்னரும் கூட, தற்போது2 ஆயிரத்து 600 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். கடுமையான ஆள் குறைப்பு,தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் ஆகியவற்றினால், ஊழியர்கள்குறைக்கப்பட்டனர். ஆனாலும் நஷ்டத்தைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே,அரசிடம் மானியம் வழங்க வேண்டும் என்றக் கோரிக்கை வலுத்தது.
தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த டியாது என்ற நிலை உருவானபோது, 52: 48என்ற விகிதத்தில் கோடாக் என்ற போட்டோபிலிம் நிறுவனத்துடன் இணைக்க அரசுயோசனை செய்தது. ஆனால், அந்த நிறுவனம் கைகழுவிட, இந்த தொழிற்சாலையின்நிலை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டது.
அதாவது, தொழிற்சாலை மறுசீரமைப்பு மற்றும் நிதிக் குழு விடம்ஒப்படைக்கப்பட்டது. இந்த அமைப்பு தொழிற்சாலையின் செயல்பாடுகளைஆராய்ந்து அதிருப்தி வெளியிட்டது.
தற்போது தொழிற்சாலையையே மூடி விட முடிவு செய்துள்ளது. இதற்கானநோட்டீசையும் விளம்பரப்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்குள்ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என அந்த நோட்டீசில் கூறியுள்ளது.
தொழிற்சாலையை மூடுவது பற்றி தொழிற்சாலையில் டெபாசிட் செய்துள்ளோர்,பங்குதாரர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுவருகிறது.
அதேசமயம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊட்டி வந்த மத்திய கனரகத்தொழிற்சாலை மற்றும் அரசு பொதுத் துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, ஊட்டிஎச்.பி.எப் தொழிற்சாலையை மூடும் எண்ணம் தற்போதில்லை. மறு சீரமைப்புக்குஅனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
அவர் ஊட்டியிலிருந்து சென்ற சில நாட்களிலேயே மூடுவதற்கான அறிவிப்புவந்துள்ளது தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எச்.பி.எப் நிறுவனத்தைப் பொறுத்தவரை வெளியில் உள்ள வராக்கடன்கள்களைவசூலித்தால் கூட தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைஉள்ளது. அதாவது, தொழிற்சாலைக்கு வரவேண்டிய தொகை ஆயிரத்து 500 கோடிவரை உள்ளது. ஆனால், தொழிற்சாலை மீதுள்ள கடன் வெறும் 400 கோடி ரூபாய்மட்டுமே எனக் கூறப்படுகிறது.
அ தாடு தற்போது இந்த தொழிற்சாலைக்கு உள்ள சொத்தின் மதிப்பு 630 கோடிரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால் இருக்கும்சொத்தை விற்றாலும் பத்தாது என்ற நிலை உருவாகி விடும்.
எச்.பி.எப் தொழிற்சாலை நலிவடையக் காரணமாக இருந்தது, அரசின்தாரளமயாமக்கல் கொள்கை, நிர்வாகச் சீர்திருத்தம் இன்மை, வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிஅக்கறையின்மை தான் எனக் கூறப்படுகிறது.
இந்த தொழிற்சாலையிலிருந்து வரும் எக்ஸ்ரே பிலிம்கள் உலக நாடுகளில் பிரசித்திபெற்றவையாக உள்ளன. இந்த எக்ஸ்ரே பிலிம்களை இந்தியாவில் உள்ள அனைத்துஅரசு மருத்துவமனைகளும் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால்,நிச்சயம், எச்.பி.எப் தொழிற்சாலை நல்ல முறையில் இயங்க வாய்ப்பு ஏற்படும்என்பதே தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனையாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications