அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

Subscribe to Oneindia Tamil

ம.தி.மு.க-வின் ஈழ ஆதர-வு மா-நாடு...வருவாரா அத்வானி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்க, இதன் பிரதிபலிப்பு குறிப்பாகதமிழகஅரசியலிலும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் -முக்கிய அங்கம் வகிக்கும், ம.தி.-மு.க, பா.ம.க இந்த இரு கட்சிகளுமே இலங்கைத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று விடுதலைப்புலிகளு-க்-கு ஆதர-வா-க பேசிவருவதாக உளவுத்துறையினர் மத்திய,மாநில அரசுக்கு தகவல் அனுப்பி-யுள்-ள-னர்.

நம் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளே இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசக்கூடாது என்றும.தி.மு.க , பா.ம.க தலைவர்களான வைகோ, ராமதாஸ் இருவரிடம் நேரடியாகவே கேட்டுக்கொண்டாராம் பிரதமர் வாஜ்பாய்.

தமிழக முதல்வர் கருணா-நிதியும் கூட ம.தி.மு.க , பா.ம.க இருகட்சிகளுமே இலங்கை விவகாரம், இலங்கைத் தமிழர்கள் என்றுஆரம்பித்து ஆளும் கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள் என்று வருத்தப்பட்டாராம். சம்பந்தப்பட்ட ராமதாஸ், வைகோஇருவரிட-மும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் முதல்வர் கருணா-நிதி.

இந் நிலையில் ம.தி.மு.கவின் இன எழுச்சி மாநாடு வரும் ஜூ-லை மா-தம் 1, 2 ஆகி-ய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் தங்-க-ளு-க்-கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக புலிகளுக்கு ஆதரவாக ஏதும் பேசிவிடக்கூடாது என்று ஏககவலையில் இருக்கின்-றன மத்திய மா-நி-ல அரசுகள்.

ஏதாவது பேசி, அதன் பின் நடவடிக்கை எடுத்தாலும் கஷ்டம். காரணம், கூட்டணியில் இருக்கின்ற கட்சி ம.தி.-மு.க. அதன் மீ-துநடவடிக்கை எடுக்காமல் விட்டால் எதிர்கட்சிகள் புயலைக்கிளப்பும். என்று கவலைப்படுகின்ற-ன மத்திய, மாநில அரசுகள்.

இந்த மாநாட்டிற்கு வ-ரு-மா-று வாஜ்பாய், அத்வானி உட்பட கூட்டணி கட்சியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும்அழைத்திருக்கிறார் வைகோ. தலைவர்களை சந்திக்கும் பொழுது, விடுதலைப் புலிகளின் ஆதரவுப் போக்கை கைவிட்டுவிடுங்கள்.இலங்கைப்பிரச்சனை பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவ-ரி-டம் கேட்டுக்கொண்டார்களாம்.

மாநாட்டு ஏற்பாடுகள் தடபுடலாக -நடந்துகொண்டிருக்கின்-ற-ன. மு-த-லில் மத்-தி-ய அமைச்-சர் அத்வானி இந்த மாநாட்டில்கலந்துகொள்வதாக இருந்தது. இப்பொழுது நிலைமையே வேறு. மாநாட்டை ஒட்டி ம.தி.-மு.க -நடத்தும் பொதுக் கூட்டங்களில்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் நடைபெறுவதை மத்திய உளவுத்துறையினர் குறித்துவைத்துக் கொண்-டுடெல்லிக்கு அனுப்பினார்கள்.

இதுதவிர மாநாடு தொடர்பான சுவர் விளம்பரங்கள் மிகவும் கவனமாக குறித்து அனுப்பியுள்ளது. உளவுத்துறை. சுவர்விளம்பரங்களில் ஒவியமாக புலி படம் வரையப்பட்டுள்ளது. பார்லிமென்ட் டைகர் வைகோ என்றும் எ-ழு-தப்-பட்--டுள்-ள-து.

இலங்கைத் தமிழர் பிரச்சனை தீவிரமாக இங்கு விவாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அத்வானி இந்தமா-நாட்டில் கலந்து கொள்வது ச-ரியாக இருக்காது என்று சில உயர் அதிகா-ரிகள் டெல்லிக்கு குறிப்பு அனுப்பியிருக்கிறார்களாம்.

அத்வானி மாநாட்டிற்கு வருவாரா என்பதுதான் இப்பொது தமிழக அர-சி-யல் மட்-டத்-தில் நில-வும் டென்ஷன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+