தமிழகத்தில் இன்று
""டான்சி வழக்கிலிருந்து விடுவியுங்கள்"" - ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரும் ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டம்ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்குத்தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், இவ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காதிரி, வழக்கிலிருந்து விடுவிக்கும்படி இவ் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில்விசாரணையின் போது கோரலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications