தமிழகத்தில் இன்று
"பிரதமர் வாஜ்பாயியின் சுற்றுப்பயணத்தால் ஐரோப்பாவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரிக்கும்"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணத்தால் அந் நாடுகளுக்கான இந்தியசாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கமிஷன மற்றும் ஐரோப்பிய சாப்ட்வேர் தொழிற் சங்கங்களுடன் பிரதமர் பேச்சு நடத்த உள்ளார்.ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்ப வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாகஇந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது தகவல் தொழில்நுட்பத் துறையில்இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்த உதவுவதாக ஐரோப்பியசாப்ட்வேர் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1999-2000-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரூ.3,900 கோடி மதிப்புள்ள சாப்ட்வேர்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications