தமிழகத்தில் இன்று
பஞ்-சா-பில் குண்டுவெடித்-து 2 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜலந்தர்:
ஜலந்தரில் உள்ள லமா பின்ட் சோக் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இறந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த பிரகாஷ் சிங் என்பவர் ஒரு காலை இழந்தார். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கவுரவ் யாதவ் கூறுகையில், ஜலந்தரில் லமா பின்ட் சோக் பகுதியில் உள்ள நடமாடும் டீக்கடை அருகே நடந்தஇக்குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை உபயோகித்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
ஆனால் எந்த வகையான வெடிகுண்டை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் குண்டுவெடிப்பு நடமாடும் டீக்கடைக்குள்நடந்ததா? அல்லது வெளியே நடந்ததா ? என்ற விபரமும் தெரியவில்லை.
அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்விபத்தில் இறந்தவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த தினேஷ், மற்றும் நிரஞ்சன் என்று அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அமர்சந்த் மற்றும் அர்த்தூர் ஆகிய இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தின்போது அங்கிருந்த பல்பீர் குமார் கூறுகையில், நாங்கள் அனைவரும் லமா பின்ட் சோக் பகுதியில் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம்நடத்திய கலைநிகழ்ச்சிகளை அப்பகுதியில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. என்னுடன் கலைநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த 5 பேர்படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் இறந்துவிட்டனர்.
டீக்கடை பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல சைக்கிள்கள் சுக்குநூறாய் உடைந்துநொறுங்கின என்றார்.
போலீசார் முதலில் டீக்கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கும் என்று வழக்குப் பதிவு செய்தனர். ஆனால்இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் பவன்குமார் கூறுகையில், நான் இரவு கடையை மூடும்முன்பு கியாஸ் சிலிண்டரை அணைத்துவிட்டுத்தான் சென்றேன் என்றார்.
இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications