"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
இந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எந்தப் பங்கும்கிடையாது. -மாநிலத்திலேயே அமையக் கூடிய நீதி மன்றம்தான் உச்ச நீதிமன்றமாகஇருக்கும்; அகில இந்திய தணிக்கை அதிகாரிக்கு இந்த மாநிலத்தில் வேலை இல்லை.
அதே போல தேர்தல் கமிஷனுக்கும் இந்த மாநிலத்தில் ஒரு பணியும் கிடையாது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். - அதிகாரிகள் இந்த மாநிலத்தில் எந்தப்பணிக்கும் அமர்த்தப்படக் கூடாது.
இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் இங்குசெல்லுபடியாகாது - அதற்கு பதிலாக மாநிலமே வேறு அடிப்படை உரிமைகளைவகுக்கும்; முதல் மந்திரி, பிரதம மந்திரி என்று அழைக்கப்படுவார்..."
பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் காஷ்மீர் மாநில சுயாட்சி திட்டம் இது. இதுதொடர்பான தீர்மானம் காஷ்மீர் சட்டசபையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸும், பா.ஜ.க.வும் இதை எதிர்த்தாலும், ஃபரூக் அப்துல்லா பக்கம் மெஜாரிட்டிபலம் இருப்பதால், அவர் நினைத்தால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம்.போனால் போகிறது என்று மத்திய அரசுக்கு பாதுகாப்பு, அயல் நாட்டு உறவு, தகவல்தொடர்பு ஆகிய விஷயங்களை ஒதுக்குகிறது இந்த சுயாட்சி தீர்மானம்.
முன்பு தமிழக சட்டசபையில் தி.மு.க. ஒரு மாநில சுயாட்சி தீர்மானத்தைநிறைவேற்றியது. அதில் இன்னும் கொஞ்சம் தாரளமாக மேலும் ஓரிரு விஷயங்கள்மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டன. மாநில சுயாட்சியுடன் தி.மு.க. வுக்கு இருக்கும்அரைகுறை உறவை, தமிழக முதல்வர் சந்தடி சாக்கில் இப்போது ஞாபகப்படுத்திஇருக்கிறார்.
நம்மைப் பொறுத்த வரையில் இந்த விஷயம் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய விஷயம்.
ஃபரூக் அப்துல்லாவுக்கு இந்த மாதிரி ஒரு ஸ்டண்ட் அடிப்பது அரசியல் தேவையாகிவிட்டது. ஆனால் தன்னுடைய அரசியலுக்காக அவர் செய்ய முனைந்துள்ள காரியம்,தேசத்தின் அரசியலுக்கு வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்,
காஷ்மீருக்கு இந்த மாதிரி சுயாட்சிஅளிக்கப்பட்டால், தமிழ் நாட்டில் மீண்டும் சுயாட்சிதத்துவம் புதுப்பிக்கப்படும். பஞ்சாபிலும் இந்த விஷமம் ஆரம்பிக்கும். அதன் பிறகு,வேறு சில மாநிலங்களுக்கும் இது பரவுவது எதிர்பார்க்கக்கூடியதே. மிகவும்பலவீனமான ஒரு மத்திய அரசு உருவாவதற்கு இது வழிவகுக்கும்.
நாடு பல துண்டுகளாக்கப்படுவதற்கும், இது முதல்படியாக அமையும். ஆகையால்ஆரம்பத்திலேயே ஃபரூக் அப்துல்லாவின் யோசனையை நசுக்கி விடுவதுதான் நல்லது.
இதை வளர விட்டால் ஆங்காங்கே இதற்கு ஆதரவு முளைக்கும். இப்போதே ஒரு சிலபத்திரிக்கைகள், தீவிரவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் காஷ்மீருக்குசுயாட்சி கொடுத்து விடுவதுதான் நல்லது என்ற வகையில் கருத்து தெரிவிக்கஆரம்பித்துள்ளன.
தீவிரவாதிகளுடன் பேசுவதற்கு தயார் என்ற பா.ஜ.க. அரசின் நிலை, இந்த வாதத்தைஓரளவாவது நியாயப்படுத்துகிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.தீவிரவாதத்தை நசுக்கி, அதை ஒழித்துக் கட்ட முனைவதற்கு பதிலாக,பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்ற அந்தஸ்தை தீவிரவாதிகளுக்குக் கொடுப்பது நல்லபயனைத் தரப் போவதில்லை.
அரசும் சரி, சில பத்திரிக்கைகளும் சரி, காஷ்மீர் விஷயத்தில் பலவீனமானகருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அடிப்படைக் காரணம் ஒன்று இருக்கிறது. காஷ்மீர் நம்நாட்டின் ஒரு பகுதி - என்ற நினைப்பு நமக்கு பூரணமாக வரவில்லை. ஏதோகஷ்டப்பட்டு நாம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு பிரதேசமாகத்தான் காஷ்மீரைநாமே நமது உள் மனதில் நினைக்கிறோம்.
இதனால்தான் சுயாட்சி குரலுக்கு ஆதரவு; தீவிரவாதிகளுடன் சமாதான முயற்சிக்குப்பாராட்டு - என்ற வக்ர நிலைகள் தோன்றுகின்றன. எப்படியாவது நம்மோடு, ஏதோகொஞ்சம் உறவுடன் காஷ்மீர் இருந்து விட்டால், அதுவே போதும் - என்ற நினைப்புநம்மை விட்டு அகல வேண்டும்.
காஷ்மீரில் நமது மாட்சிமை தளர்வது நமது எல்லைப் பாதுகாப்புக்கு சற்றும் நல்லதல்லஎன்று சில ராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்க இந்த விஷயத்தில்ஆட்சியாளர்களுக்கு தளர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது. தீவிரவாதிகளை சமாதானம்செய்யும் முயற்சியும் கைவிடப்பட வேண்டும்.
ஃபரூக்கை தூக்கி நிறுத்தினால், காஷ்மீர் பிரியாமல் இருந்து விடும் என்ற அசட்டுநம்பிக்கையும் கைவிடப்பட வேண்டும். அரசின் முழு அதிகாரமும், ராணுவத்தின் முழுபலமும் பயன்படுத்தப்பட்டு, அரசு இப்போது காட்ட வேண்டியது காருண்யமோ,தயக்கமோ அல்ல, நெஞ்சுரம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications